துன்புறுத்தப்படும் சிறாருக்கு உதவி

வீட்­டில் துன்­பு­றுத்­தப்­படும் சிறார் உதவி நாடு­வது சிர­ம­மா­கி­யுள்­ளது.

இதற்கு கொவிட்-19 நெருக்

கடி­நிலை கார­ண­மாக உள்­ளது.

வீட்­டி­லி­ருந்து கல்வி கற்­கும் முறை­யால் சிறு­வர்­கள் பிற­ரு­டன் தொடர்­பு­கொள்­ளும் வாய்ப்பு

குறைந்­து­விட்­டது.

இத­னால் வீட்­டில் துன்­பு­றுத்­தப்­பட்­டா­லும் அதை மற்­ற­வர்­க­ளி­டம் தெரி­வித்து உதவி பெற முடி­யா­மல் சிறு­வர்­கள் தவிக்­கக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண தாம் துன்­பு­றுத்­தப்

படு­வ­தாக மற்­ற­வர்­க­ளி­டம் தெரி­விக்க சிறா­ருக்­குச் சைகை முறை­யைக் கற்­றுக்­கொ­டுப்­பது மிக­வும் அவ­சி­யம் என்று சிறார் துன்­பு­றுத்­தல் தொடர்­பாக நேற்று நடை­டெற்ற கருத்­த­ரங்­கில் கலந்துகொண்ட சமூக ஊழி­யர்­கள் கருத்து தெரி­வித்­த­னர்.

இந்­தக் கருத்­த­ரங்கை 'கசா ரௌடா' அமைப்பு ஏற்­பாடு செய்­தது. அதில் பங்­கெ­டுத்­த­வர்­கள் வீட்­டில் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு ஆளா­கும் சிறா­ரைக் காப்­பாற்ற எதிர்­கொள்­ளும் சவால்­க­ளைப் பற்றி பகிர்ந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த பத்­தாண்டு களில் இல்­லாத அள­வுக்­குக் கடந்த ஆண்­டில் ஆக அதி­க­மான சிறார் துன்­பு­றுத்­தல் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் சிறார் பாது­காப்­புச் சேவைப் பிரி­வில் 5,200க்கும் அதி­க­மான புகார்­கள் செய்­யப்­பட்­டன.

சிறார் துன்­பு­றுத்­தல் தொடர்­பாக 1,300க்கும் அதி­க­மான விசா­ர­ணை­களை அமைச்சு நடத்­தி­யது.

துன்­பு­றுத்­தப்­படும் சிறா­ருக்கு உத­வும் நோக்­கில் தமது அமைச்­சின் 'பிரேக் தி சைலன்ஸ்' இயக்­கம் சைகையை புதிய சின்­ன­மா­கக் கொண்­டி­ருக்­கும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை

அமைச்­சர் சுன் ஷுவெலிங் தெரி­வித்­தார்.

துன்­பு­றுத்­தப்­படும் சிறார் சைகை­யைப் பயன்­ப­டுத்தி உதவி நாட­லாம் என்­பதை இது பிர­தி­ப­லிப்­ப­தாக அமைச்­சர் சுன் ஷுவெலிங் தெரி­வித்­தார்.

சிறா­ருக்­குக் கற்­றுத் தரப்­பட இருக்­கும் இந்த சைகைக்கு 'காப்­பாற்­றுங்­கள்' என்று பொருள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!