கரையோரப் பூங்காவில் புதிய கவர்ச்சித் தலம்

கரையோரப் பூங்காவில் புதிய கவர்ச்சித் தலம்

1 mins read
78f410f1-e831-4c9b-ac39-fcf4bb43315d
கிங்­ஃபி­ஷர் வெட்­லேண்ட்ஸ்' கவர்ச்­சித் தலத்தின் மொத்த பரப்பளவு 15,000 சதுர மீட்டராகும். இது இரண்டு காற்பந்துத் திடல்கள் அளவு பெரிது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கரை­யோ­ரப் பூங்­கா­வில் 'கிங்­ஃபிஷர் வெட்­லேண்ட்ஸ்' எனும் புதிய கவர்ச்­சித் தலம் திறக்­கப்­பட்­டுள்­ளது. இயற்கை ஆர்­வ­லர்­களும் புகைப்­பட விரும்­பி­களும் வன­விலங்கு­க­ளை­யும் தாவ­ரங்­க­ளை­யும் கண்­டு­ர­சிக்க இது மற்­றோர் இட­மாக அமை­யும்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று புதிய தலத்­தைத் திறந்­து­வைத்­தார்.

'சாத்தே பாய் தி பே' உண­வங்­காடி நிலை­யத்­துக்கு அருகே புதிய கவர்ச்­சித் தலம் அமைந்­துள்­ளது.

மீன்­கொத்­திப் பறவை ஏரி, தாமரைக் குளம் ஆகிய இரண்டு நீர்­நி­லை­களும் இதில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

முன்பு தனித்­த­னி­யாக இருந்த இரண்டு நீர்­நி­லை­க­ளை­யும் தற்­போது நடை­பா­தை­யின்­கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள இரண்டு ஓடை­கள் இணைக்­கின்­றன.

இவை­யும் கற்­கு­ளத்­தில் பாய்ந்து செல்லும் நீரும் அங்­குள்ள நீரில் உள்ள உயிர்­வா­யுவை அதி­க­ரிக்க உத­வு­வ­தாக கவர்ச்­சித் தலத்தை வடி­வ­மைத்த திரு­வாட்டி லீ பிங் பிங் கூறி­னார். இது நீரின் தரத்தை உயர்த்த உதவி செய்வதாகவும் அவர் சொன்னார்.

மேலும் அங்­குள்ள சிறிய விலங்கு­க­ளை, பெரிய நீர்நிலைகளில் உள்ள பெரிய விலங்­கு­கள் வேட்­டை­யாட நேர்ந்­தால் அப்­போது சிறிய விலங்­கு­கள் ஓடை­களில் தஞ்­சம் அடையலாம் என்­றார் அவர்.

இத்துடன், புதிய சதுப்புநிலப் பகுதியில் வனவிலங்குகளைப் பார்வையிடுவதற்கான கூடாரமும் மீன்கொத்திப் பறவைகளுக்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

தாமரைக் குளத்தில் 200க்கும் மேற்பட்ட சதுப்புநிலத் தாவரங்கள் நடப்பட்டுள்ளன. இவற்றில் சில அழியக்கூடிய ஆபத்தில் உள்ள வகைகளைச் சேர்ந்தவை.

புதிய தலம் ஆறு மாதங்களில் கட்டப்பட்டது. அதற்கு கிக்கோமான் நிறுவனம் $500,000 நன்கொடையை வழங்கி உதவியது.