கடல் தொழில்துறையில் புதிய வேலையைப் பெறுவதற்கான மேம்படுத்தப்பட்ட மாற்று வாழ்க்கைத்தொழில் செயல் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேலை பெற 300 பேருக்கு வாய்ப்புள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று தெரிவித்தார்.
கடல்துறை தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இதர தொழில்துறை களில் இருந்து பயனுள்ள தேர்ச்சி, அறிவுடன் வரு வோருக்குக் கடல் தொழில் துறையில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார்.