‘எஃப்-1’ கார் பந்தயம்; சிங்கப்பூர் பேச்சுவார்த்தை

அடுத்த ஆண்­டு 'எஃப்-1' கார் பந்­த­யத்தை தொடர்ந்து நடத்­து­வது குறித்து பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­வ­தாக போக்­கு ­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வாண்­டின் இரவு கார் பந்­த­யப் போட்டி கொவிட்-19 கார­ண­மாக ரத்து செய்­யப்­பட்­டது. 2017ல் போட்­டியை நீட்­டிக்­கும் ஒப்­பந்­தம் போடப்­பட்­டது. இதன் கடைசிப் போட்டி இவ்­வாண்டு நடை­பெ­று­வ­தாக இருந்­தது.

செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நிரு­பர் ஒரு­வர் கேட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்த அமைச்­சர், புதிய ஒப்­பந்­தம் குறித்து சிங்­கப்­பூர் ஃபார்முலா ஒன் ஏற்­பாட்­டா­ளர்­களும் ஃபார்முலா ஒன் நிர்­வா­கத் ­தி­ன­ரும் பேச்சு நடத்தி வரு­கின்­ற­னர் என்­றார்.

கொவிட்-19 கார­ண­மாக 'எஃப்-1' கார் பந்­த­யம் உட்­பட பல நிகழ்­வு­கள் ரத்து அல்­லது ஒத்திவைக்­கப்­பட்­ட­தால் சிங்­கப்­பூ­ரின் சுற்­றுலாத்துறை பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்று திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் உலக அள­வில் முத்­தி­ரை பதிக்­க­வும் பொரு­ளி­யல் நன்­மை­க­ளுக்­கும் எஃப்-1 போன்ற நிகழ்­வு­கள் சிங்­கப்­பூ­ரில் நடத்­தப்படவேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!