உலக வர்த்தக மையமாக சிங்கப்பூரை நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடரும்: அமைச்சர் கான் கிம் யோங்

உல­கின் வர்த்­தக மைய­மாக சிங்­கப்­பூர் இருப்­பதை உறுதி செய்­யும் வகை­யில் உலக நாடு­க­ளு­ட­னான வர்த்­தகத் தொடர்­பு­கள் தொடர்ந்து வலுப்­ப­டுத்­தப்­படும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­யுள்­ளார்.

இதற்­கான வர்த்­தகத் தொடர்­பு­களை ஆழ­மாக்­கும் நீண்­ட­கால உத்­தி­களில் கவ­னம் செலுத்­தப்­படும் என்­றார் அவர்.

"சிங்­கப்­பூர் 26 தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­க­ளைச் செய்­துள்­ளது.

இது, உல­க­ளா­விய நாடு­க­ளின் 85 விழுக்­காடு உள்­நாட்டு உற்­பத்தி ­யா­கும். இவற்றை சிங்­கப்­பூர் அனு­ ம­திப்­ப­தன் மூலம் வர்த்­த­கம், பய­ணம், திறன் ஆகி­ய­வற்­றின் மைய­மாக சிங்­கப்­பூர் விளங்­கும். இதில் தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளின் பங்­கும் சிங்­கப்­பூ­ருக்கு முக்­கி­யம்.

"பசுமை பொரு­ளி­யல், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் போன்ற வளர்ந்து வரும் துறை­களில் புதிய வர்த்­தக உற­வு­களை ஏற்­ப­டுத்த ஒத்த எண்­ண­மு­டைய பங்­கா­ளி ­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு வரு­கி­றோம்," என்று திரு கான் குறிப்­பிட்­டார்.

மில்ெகன் கழ­கத்­தின் 8வது ஆசிய வரு­டாந்­திர உச்­ச­நிலை மாநாட்­டில் அவர் பேசி­னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வலை சமா­ளிப்­ப­தி­லும் நீடித்த நிலைத் ­தன்­மை­யி­லும் சிங்­கப்­பூர் கொண்­டுள்ள அணு­கு­மு­றை­க­ளை­ அமைச்­சர் மேலும் விளக்­கி­னார்.

இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி, மரினா பே சேண்ட்ஸ் கண்­காட்சி, மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.

மெய்­நி­கர் வழி­யாகப் பங்­கேற்ற மில்­கென் கழ­கத்­தின் தலை­வர் மைக்­கல் மில்­கென் கருத்­த­ரங்கை வழி­ந­டத்­தி­னார்.

இதில் 300க்கும் மேற்­பட்­டோர் கலந்­துகொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!