வேலைப் பயிற்சி, திறன்மேம்பாட்டுக்கு வசதியான, சிறிய அளவிலான பயிற்சிகளைக் கொண்ட கற்றல் செயலி நேற்று தொடங்கப்பட்டது.
'லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் பிளாட்ஃபார்ம்' (Learning eXperience) எனும் அந்தச் செயலியில் தற்போது 75,000க்கும் அதிகமான பயிற்சித் திட்டங்கள் உள்ளன.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் கற்றல் மையம் செயலியை உருவாக்கியது.
நேற்று நடைபெற்ற தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் சாதாரணப் பேராளர்கள் மாநாட்டில் அது தொடங்கப்பட்டது.
செயலியை கைபேசியில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். ஆனால் சந்தா செலுத்தினால்தான் பயிற்சித் திட்டங்களைப் பயன் படுத்த முடியும். மாதாந்திரச் சந்தாத் தொகை $10 ஆகும். ஆனால் தொழிற்சங்க உறுப்பினர்கள் மாதம் ஐந்து வெள்ளி சந்தாக் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
ஆனால் அனைத்து சந்தாதாரர்களும் தங்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் உள்ள தொகையைப் பயன்படுத்தி இத்தொகையை முழுமைாகக் கழித்துக் கொள்ளலாம்.
நிறுவனப் பயிற்சி செயற்குழுக்களைக் கொண்ட வர்த்தகங்கள் புதிய செயலியை இணையவழிக் கற்றல் நிர்வாகமுறையாகப் பயன் படுத்தவும் முடியும். அந்நிறுவனங் களால் ஒரு குறிப்பிட்ட வேலைக்குரிய பாடத்தை உருவாக்கி, அதை செயலியில் பதிவேற்ற முடியும்.
ஊழியர்கள் எந்த அளவுக்கு அப்பயிற்சியைப் பயன்படுத்துகின்றனர் என்று கண்காணிக்கவும் முடியும்.