வாய்ப்புகள் குவிந்திருக்கும் மின்னிலக்க ஓவியத் துறை

கி.ஜனார்த்­த­னன்

ஓவி­ய­ராக வேண்­டும் என்று இளம் வய­தி­லேயே ஆசைப்­பட்ட ஆதிரா சுரேஷ், 23, தற்­போது தரவு நிறு­வ­னம் ஒன்­றில் வரை­கலை வடி­வ­மைப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரி­வ­து­டன் சுய­மாக வரை­கலை வர்த்­த­கம் ஒன்­றை­யும் நடத்தி வரு­கி­றார்.

சிங்­கப்­பூ­ரி­லுள்ள இளம் உயி­ரோ­வி­யக் கலைஞர்களுக்­காக நடத்­தப்­படும் 'கார்­ட்டூன்ஸ் அண்­டர்­கி­ர­வுண்ட்' நிகழ்ச்­சி­யின் ஏற்பாட்டுக் குழுவில் விளம்­ப­ரப் பிரி­வுத் தலைவ­ரா­க­ ஆதிரா பொறுப்­பேற்­றுள்­ளார்.

இந்­நி­கழ்ச்சி தன்­னிச்­சை­யாக வளர்ந்­து­ வ­ரும் சிங்­கப்­பூ­ரின் உயி­ரோ­வி­யச் சமூ­கத்தை ஒன்­றி­ணைத்து அவர்­க­ளது படைப்­பு­களை பொது­மக்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்துகிறது. பொருத்­த­மான வரைகலை நிபு­ணர்­களை அடை­யா­ளம் காண நிறு­வ­ன­ங்­க­ளுக்­கும் இத்­த­ளம் உத­வு­கிறது.

இந்த ஆண்டு பத்­தா­வது முறை­யாக நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த 20ஆம் தேதி தொடங்­கிய நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி வரை நீடிக்­கும். ஆர்ச்­சர்ட் ரோட்­டி­லுள்ள 'ஸ்கேப்' கலை­கள் மையத்­தில் சில அங்­கங்­களும் மெய்­நி­கர் வழி­யாக சில அங்­கங்­களும் இடம்­பெ­று­கின்­றன.

தென்­கி­ழக்­கா­சிய நாடுகளின், குறிப்­பாக சிங்­கப்­பூரைச் சேர்ந்த உயி­ரோ­வியக் கலை­ஞர்களின் படைப்­பு­கள் இதில் காட்­சிக்கு வைக்­கப்­படும். அத்­து­டன், வழி­காட்­டுதல் தேவைப்­படும் கலை­ஞர்­க­ளுக்கு நிகழ்ச்சி வளங்­களை வழங்­கு­வ­தா­க­வும் அளிக்­க­வும் முற்­ப­டு­வ­தாக 'கார்­ட்டூன்ஸ் அண்­டர் கிர­வுண்ட்' நிகழ்ச்­சி­யின் தலை­வர் விக்கி சென், 31, தெரி­வித்­தார்.

இந்­தத் தளத்­தின் மூல­மா­க­வும் குமாரி விக்­கி­யின் வழி­காட்­டு­தல் மூல­மா­க­வும் இத்­து­றை­யில் மேலும் வளர்ச்­சியை எட்ட முடிந்­த­தா­கக் கூறி­னார் ஆதிரா.

சிங்­கப்­பூ­ர­ரான ஆதிரா, சென்­னை­யில் பிறந்­த­வர். பெற்­றோ­ரின் வேலை நிமித்­த­மாக மூன்று வய­தில் இங்கு வந்­தார்.

"என் பெற்­றோர் என்னை ஓவிய வகுப்பு­ க­ளுக்கு அனுப்­ப­வில்லை. ஆனால் குடும்ப நண்­பர்­கள் சிலர் எங்­கள் வீட்­டுக்கு வந்து ஓவி­யங்­க­ளைத் தீட்­டும்­போது நானும் சேர்ந்து கொள்­வேன். அங்­கு­தான் என் கற்­றல் தொடங்­கி­யது," என்­றார் ஆதிரா.

தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்­வுக்­குப் பிறகு ஆதிரா சிங்­கப்­பூர் கலைப்­பள்­ளி­யில் சேர்ந்­தார். பின்­னர் லா சால்' கலைப்­பள்­ளி­யில் உயி­ரோ­வி­யத்­திற்­கான உயர் பட்­ட­யத்­தைப் பயின்­றார்.

பாரம்­ப­ரிய ஓவி­யத்­தி­றன்­களை முத­லில் கற்று, பின்­னர் மின்­னி­லக்க ஓவி­யத் திறனை ஆதிரா வளர்த்­துக்­கொண்­டார்.

பிரிட்­ட­னைத் தள­மா­கக் கொண்­டுள்ள 'மீடியா ஐகியூ' தர­வாய்வு நிறு­வ­னத்­தில் அதன் முதல் வரை­கலை நிபு­ண­ராக ஆதிரா பணி­யாற்­று­கி­றார். புரிந்­து­கொள்ள சிர­ம­மாக இருக்­கக்கூடிய புள்­ளி­வி­வ­ரங்­க­ளை­யும் எளி­தில் வரை­கலை மூலம் புரி­ய­வைப்­பது இவ­ரது பணி­யா­கும்.

வரை­க­லைத் துறை­யில் உழைப்­புக்­கேற்ற ஊதி­யம் பல­ருக்­குக் கிடைப்­ப­தில்லை என்­பதை இளம் வய­தில் கேள்­விப்­பட்­ட­போ­தும் அத­னைப் பற்றி அதி­கம் கவ­லைப்­ப­டா­மல் நாள்­தோ­றும் தமது திறன்­க­ளைத் தொடர்ந்து வளர்த்து வந்­த­தாக ஆதிரா கூறி­னார்.

என்­ன­தான் மென்­பொ­ருள் இருந்­தா­லும் தாம் அடிக்­கடி பயிற்சிக்­கா­க பென்­சி­லை பயன்­ப­டுத்­து­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"சித்­தி­ரம் கைப்­ப­ழக்­கம் என்­பது வெறும் பழ­மொழி அல்ல. மின்­னி­லக்க ஓவி­யங்­க­ளைப் படைக்க ஆசைப்­ப­டு­ப­வர்­கள் தொடக்­கத்­தில் பென்­சி­லை­யும் தாளை­யும் பயன்­ப­டுத்தி ஓவி­யங்­களை வரை­யும்­போது அளவு பார்க்­கும் திறன், கண்­ணோட்­டம் போன்ற சில திறன்­கள் மேம்­ப­டு­கின்­றன," என்று ஆதிரா பகிர்ந்­து­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!