சாலைத் தடுப்பின்மீது ஏறியதைத் தொடர்ந்து, கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் (நவம்பர் 25) நிகழ்ந்த இந்த விபத்தில் காயமடைந்த 11 வயது சிறுவன் ஒருவனும் 46 வயது ஓட்டுநர் ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்பர் சிராங்கூன் சாலை, பார்ட்லி சாலைச் சந்திப்பில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்து குறித்து மாலை 4.14 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் கூறியது.
இந்த விபத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
இந்த விபத்து குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.