மவுண்ட் பிளசண்ட் திட்டம் வருங்காலத்திற்கான வழிகாட்டி

மவுண்ட் பிள­சண்ட்­டில் பிடிஓ திட்­டம் வருங்­கா­லத்­தில் மர­பு­டை­மைத் தளங்­களை எவ்­வாறு மறு­மேம்­பாடு செய்­ய­லாம் என்­ப­தற்­கான வழி­காட்டியாக அமைய உள்­ளது.

அந்த வட்­டா­ரத்­தில் 33 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் 5,000 புதிய பிடிஓ வீடு­கள் கட்­டப்­பட உள்­ளன. முன்­னாள் காவல்­துறை பயிற்சிக் கல்லூரி இருந்த இடத்­தில் இந்த வீடு­கள் கட்­டப்­படும் அதே நேரம் அந்­த பயிற்சிக் கல்லூரியைச் சுற்­றி­லும் பன்­னெ­டுங்­கா­ல­மாக இருந்து வரும் ஆறு கட்­ட­டங்­கள் பழமை பாது­காப்­புக்கு ஒதுக்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட உள்­ளன.

இவற்­றில் நான்கு கட்­ட­டங்­கள் 5,000 வீடு­க­ளு­டன் உரு­வா­கும் பொது வீட­மைப்­புப் பேட்­டை­யில் உள்­ளன. அவற்­றில் ஒன்று மூத்த காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் உண­வுக்­கூ­டம். காவல்­துறை பொழு­து­போக்­குக் கூட­மாக அது தொடர்ந்து பயன்­ப­டுத்­தப்­படும். அதே­நே­ரம் மற்ற கட்­ட­டங்­கள் வர்த்­தக, சமூ­கப் பயன்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும்.

இதற்­காக நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் மற்­றும் தேசிய மர­பு­டைமைக் கழகம் ஆகியவை ஆய்வு ஒன்றை நடத்­தின. மர­பு­டைமை தொடர்­பான மிக­வும் விரி­வான ஆய்­வாக அது அமைந்­தது. மேலும் இந்த வீட­மைப்­புத் திட்­டத்­திற்­காக மர­பு­டை­மைக் குழுக்­க­ளின் ஆலோ­ச­னை­களும் பெறப்­பட்­டன. ஆய்வு மூலம் கற்­றுக்­கொண்ட அம்­சங்­கள் வருங்­கால ஆய்­வு­களை வழி­ந­டத்­தும் என்­ப­தோடு மிக முக்­கி­ய­மாக மர­பு­டைமை தாக்க மதிப்­பீட்டு கட்­ட­மைப்­புக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!