கெப்பல் திட்டம் தொடர்பாக கெப்பல் நிறுவனத்துடன் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) கொண்டுள்ள கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் அடுத்த மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே கெப்பல் நிறுவனம் முன்வைக்கும் பரிந்துரைகளுக்கு எஸ்பிஎச்
பங்குதாரர்கள் வாக்களிக்கலாம்.
'குறிப்பிட்ட நிகழ்வு' காரணமாக கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஎச்சின் இயக்குநர் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கஸ்கேடன் பீக் நிறுவனம் முன்வைத்துள்ள பரிந்துரைகள் கெப்பல் நிறுவனத்தின் பரிந்துரைகளைவிட சிறப்பாக இருப்பதாக எஸ்பிஎச்சின் சுயேட்சை இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
கெப்பலின் பரிந்துரை நிரா
கரிக்கப்பட்டால் கஸ்கேடன் பீக்கின் பரிந்துரைக்கு மட்டும்
வாக்கெடுப்பு நடத்தப்படும்.