பணிமாற்றத்துக்கு வித்திட்ட பேருந்து நிறுத்த விளம்பரம்

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (என்­டியு) 2019ஆம் ஆண்­டில் இயந்­திரவியல் பொறி­யி­ய­லில் பட்­டம் பெற்­றார் திரு சுன் சாங்.

அதே ஆண்­டில் அவ­ருக்குப் பொறி­யா­ள­ராக வேலை கிடைத்­த­து.

ஆனால் தமது வீட்­டுக்கு அரு­கில் உள்ள பேருந்து நிறுத்­தத்­தில் இருந்த விளம்­ப­ரத்­தைப் பார்த்து பணி­மாற்­றம் செய்ய அவர் முடி­வெ­டுத்­தார். மூத்த மருத்­துவ உதவி அதி­கா­ரி­யா­கப் பணி­பு­ரிய பட்­ட­தா­ரி ­களை அந்த விளம்­ப­ரம் ஊக்­கு­வித்­தது. சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள மூத்த மருத்­துவ உதவி அதி­காரி திட்­டத்­தின் முதல் 10 பயிற்சி அதி­கா­ரி­களில் 29 வயது திரு சாங்­கும் ஒரு­வர். இந்­தத் திட்­டம் கல்வி, ஆய்வு, இயங்­கு­முறை போன்ற பிரிவுகளில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­க­ளுக்­கான தலை­வர்­களை உரு­வாக்­கு­கிறது. சிங்­கப்­பூ­ரின் மூப்­

ப­டை­யும் மக்­கள்­தொ­கை­யால் அவ­ச­ர­கால மருத்­து­வச் சேவை­க­ளுக்கான தேவை அதி­க­ரிப்­ப­தா­க­வும் அதைப் பூர்த்தி செய்­வதே இத்­திட்­டத்­தின் இலக்கு என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் ஓராண்டு மருத்­துவ உதவி அறி­வி­யல் பட்­ட­யப் படிப்பு, குடி­மைத் தற்­காப்­புப் படை பயிற்­சிக் கழ­கத்­தில் ஐந்­தரை மாதப் பயிற்சி ஆகி­யவை மூலம் தேவை­யான திறன்­களைப் பயிற்சி அதி­கா­ரி­கள் பெறுவர்.

பயிற்சியில் ஈடுபடும் திரு சுன் சாங் (இடது).

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!