வீட்டில் மயில் வளர்க்கலாம்: தேசிய பூங்காக் கழகம் விளக்கம்

சிங்­கப்­பூ­ரில் மயில்­க­ளைச் செல்­லப் பிரா­ணி­க­ளாக வளர்க்­க­லாம் என்றும் அவற்­றின் உரி­மை­யா­ளர்­கள் விதி­க­ளுக்கு இணங்கி நடக்க வேண்­டும் என்­றும் தேசிய பூங்­காக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஞாயி­றன்று சிராங்­கூன் கார்­டன் பகு­தி­யில் மூன்று வய­துச் சிறு­மியை மயில் கொத்­திய சம்­ப­வம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

இதன் தொடர்­பில் கேட்­ட­தற்கு, கோழி, வாத்து, வான்­கோழி, காடை, கௌதாரி, செம்­போத்து என அழைக்­கப்­படும் காட்­டுக்­கோழி, வீட்­டுப்­புறா, கினி கோழி, அன்­னம், மயில் போன்­ற­ கோழி இனப் பறவைகளைச் செல்­லப் பிரா­ணி­களாக வளர்க்­க­லாம் என்று பூங்­காக் கழ­கம் விளக்­கமளித்ததாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

அதே வேளை­யில், ஒரு­வர் வளர்க்­கும் இத்­த­கைய செல்­லப் பிரா­ணி­க­ளின் எண்­ணிக்கை பத்தைத் தாண்­டக்­கூ­டாது.

பூங்­காக் கழ­கத்­தின்­கீழ் செயல்­படும் விலங்­கு­நல மருத்­து­வச் சேவை­யின் சமூக விலங்கு நிர்­வா­கப் பிரி­வின் குழும இயக்­கு­நர் ஜெசிக்கா குவோக் கூறு­கை­யில், "இப்­பி­ரா­ணி­களை ஒரு பற­வைக்­கூண்­டில், வீட்­டில் அல்­லது மெல்­லிய கம்பி வலை­யால் ஆன அடைப்­பிற்­குள் வைத்­தி­ருக்க வேண்­டும். முறை­யான கூரை வச­தி­யைக் கொண்­டி­ருந்து, அப்­ப­ற­வை­க­ளின் எச்­சங்­கள், கழி­வு­கள், இற­கு­கள் போன்­றவை வெளி­யில் விழா­மல் தடுக்­கப்­பட வேண்­டும்," என்­றார்.

செல்­லப் பிரா­ணி­யாக வளர்க்­கப்­படும் மயில் கொத்­தி­ய­தால் சிறுமி­யின் முகத்­தில் தையல்­கள் போட வேண்டியிருந்த நிகழ்வு பற்றி கழ­கம் விசா­ரித்து வரு­வ­தாக திருவாட்டி குவோக் குறிப்­பிட்­டார்.

சிராங்­கூன் கார்­டன், ஹாஸ் பூங்கா பகு­தி­யில் உள்ள விளை­யாட்­டுத் திட­லில் இருந்து தன் தந்தை, சகோ­த­ர­னு­டன் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது அச்­சி­று­மியை மயில் தாக்­கி­யது.

மயி­லைக் கண்டு ரசிப்­ப­தற்­காக ஒரு வீட்­டிற்கு வெளியே நின்­ற­போது அது தம் மக­ளைத் தாக்­கி­ய­தாக அவ­ரின் தாயார் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் விவ­ரித்­து இ­ருந்­தார்.

வீட்­டின் உரி­மை­யா­ளர் வாயிற்­கதவைத் திறந்துவைப்­பார் என்­பதால், அடிக்­கடி அந்த மயி­லைச் சாலை­யில் காண­லாம் என்று அண்டை வீட்­டி­னர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!