சில்வியா லிம்: செங்காங்கில் இடைத்தேர்தல் இல்லை

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பொறுப்­பி­லி­ருந்து ரயீசா கான் வில­கி­யுள்­ள­போ­தி­லும், செங்­காங் குழுத் தொகு­தி­யில் இடைத்தேர்­தல் நடத்­தப்­ப­டாது என்று பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர் சில்­வியா லிம் தெரி­வித்­துள்­ளார்.

ரயீசா கானின் மேற்­பார்­வை­யின்­கீழ் இருந்த காம்பஸ்வேல் தொகுதிப் பணிகள் மீத­முள்ள மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­

க­ளான திரு­வாட்டி ஹி டிங் ரு, இணைப் பேரா­சி­ரி­யர் ஜேமஸ் லிம், திரு லுயிஸ் சுவா ஆகி­யோ­ரி­டையே பிரித்­துக்­கொள்­ளப்­படும். இந்த மூவ­ரும் செங்­காங் குழுத் தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தொடர்ந்து செயல்­ப­டு­வர். பாட்­டா­ளிக் கட்­சி­யின் துணைத் தலை­வ­ரும் அல்­ஜு­னிட் குழுத் தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு ஃபைசல் மனாப், செங்­காங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆலோ­ச­க­ரா­கச் செயல்­ப­டு­வார்.

கடந்த ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் செங்­காங் குழுத் தொகுதி குடி­யி­ருப்­பா­ளர்­கள் பாட்­டா­ளிக் கட்­சிக்­காக வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்­ததை திரு­வாட்டி லிம், செய்­தி­

யா­ளர் கூட்­டத்­தில் சுட்­டி­னார்.

ஒரே குழுத் தொகு­தி­யைச் சேர்ந்த அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பதவி வில­கி­னால் மட்­டுமே இடைத்தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்று சட்­டம் தெளி­வா­கத் தெரி­விப்­ப­தாக அவர் கூறி­னார். அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யிட 2017ஆம் ஆண்­டில் திரு­வாட்டி ஹலிமா யாக்­கோப் பதவி வில­கி­ய­போது மார்­சி­லிங்-இயூ டீ குழுத் தொகு­தி­யில் இடைத்தேர்­தல் நடத்த தேவை­யில்லை என்று 2019ஆம் ஆண்­டில் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­ததை திரு­வாட்டி லிம் நினை­வூட்­டி­னார்.

"செங்­காங் குழுத் தொகு­தி­யில் எங்­க­ளுக்கு மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். செய்­வ­தற்கு இன்­னும் நிறைய வேலை இருக்­கிறது. தவணை முடி­யும் வரை கட­மை­யாற்­றும் பொறுப்பு பாட்­டா­ளிக் கட்­சிக்கு உள்­ளது. அதையே நாங்­கள் செய்­வோம்," என்­றார் திரு­வாட்டி லிம்.

இதற்­கி­டையே, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பொறுப்­பி­லி­ருந்து ரயீசா கான் வில­கி­யி­ருப்­பதை பெரும்­பா­லான செங்­காங் குடி­

யி­ருப்­பா­ளர்­கள் வர­வேற்­றுள்­ள­னர்.

நாடா­ளு­மன்­றத்­தில் அவர் பொய் பேசி­ய­தால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தொடர்ந்து செயல்­படும் தகு­தியை அவர் இழந்­து­விட்­ட­தா­க­வும் மக்­கள் அவர் மீது வைத்­தி­ருந்த நம்­பிக்கை இல்­லா­மல் போய்­விட்­ட­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய செங்­காங் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பலர் கூறி­னர்.

"பதவி விலக ரயீசா கான் எடுத்த முடிவு சரி­யா­னது. நாடாளு ­மன்ற உறுப்­பி­னர் என்­கிற முறை­யில் அவர் நல்ல முன்­னு­தா­ர­ண­மாக இருந்­தி­ருக்க வேண்­டும். பொது­மக்­க­ளி­டம் அவர் பொய் சொல்­லி­யி­ருக்­கக்­கூ­டாது. இனி மக்­கள் அவரை நம்­ப­மாட்­டார்­கள். அமைச்­சர் அல்­லது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யில் இருப்­போர் நேர்­மை­யு­டன் கட­மை­யாற்ற வேண்­டும்," என்று செங்­காங் வட்­டா­ரத்­தில் 20 ஆண்­டு­க­ளாக வசித்து வரும் 65 வயது ராமையா உமா­ராணி தெரி­வித்­தார். ஆனால் இது­கு­றித்து நடத்­தப்­பட்ட ஆய்­வில் பங்­கெ­டுத்த 20 காம்­பஸ்­வேல் குடி­யி­ருப்­பா­ளர்­களில் மூவர் ரயீசா கான் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தொடர்ந்து செயல்­பட்­டி­ருக்­க­லாம் என்று தெரி­வித்­த­னர். பாலி­யல் குற்­றம் தொடர்­பான வழக்கை காவல்­து­றை­யி­னர் முறை­யற்ற வகை­யில் கையாண்­ட­தா­கத் தாம் கூறி­யது உண்­மை­யல்ல என்று கடந்த மாதம் 1ஆம் தேதி­யன்று நாடா­ளு­மன்­றத்­தில் ரயீசா கான் ஒப்­புக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!