மின்கட்டணம் திடீர் உயர்வு

ஒட்­டு­மொத்த சந்­தை­யில் மின்­சா­ரம் வாங்­கும் குடும்­பங்­க­ளின் அக்­டோ­பர் மாதக் கட்­ட­ணம் வழக்­கத்­திற்கு மாறாக அதி­க­ரித்து காணப்­பட்­டது.

இதற்கு ஒட்­டு­மொத்தச் சந்­தை­யில் விலை ஏற்ற இறக்­க­மாக இருந்­ததே கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

அக்­டோ­பர் மாதத்­தில் ஒவ்­வோர் அரை மணி நேரத்­திற்­கும் விலை கூடி­யும் குறைந்­தும் காணப்­பட்­டது. இதனால் வீட்­டின் மின்­சா­ரக் கட்­ட­ண­மும் அந்த மாதத்­தில் அதி­க­ரித்­தது.

ஒட்­டு­மொத்த சந்­தை­யில் அக்­டோ­பர் மாதத்­திற்­கான மின்­சார விலை ஒரு கிலோ­வாட்­டுக்கு 50 காசு வரை கூடி­யி­ருந்­தது.

இந்த விலை உயர்வு, சிங்­கப்­பூர் மட்­டு­மல்­லா­மல் உலக அள­வில் காணப்­பட்­டது. செப்­டம்­ப­ரில் ஒரு கிலோ­வாட் மின்­சா­ரக் கட்­ட­ணம் 16 காசாக இருந்­தது.

ஒட்­டு­மொத்தச் சந்­தை­யில் மிகப்­பெ­ரிய மாற்­றம் இருந்­த­தால் சில மின்­சார சில்­லறை விற்­ப­னை­ யாளர்­க­ளால் தாக்­குப்­பி­டிக்க முடி­ய­வில்லை.

இத்­த­கைய சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­கள் ஒட்­டு­மொத்த விலைக்கு மின்­சா­ரத்தை வாங்கி வீ­டுகளுக்கு சலுகை விலை­யில் விற்று வரு­கின்­ற­னர்.

மின்­சா­ரக் கட்­ட­ணம் திடீர் அதி­க­ரிப்­பால் பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான 23 வயது கணக்­கா­ள­ரான கேத்­த­ரின் சீயின் மாதாந்­திரக் கட்­ட­ணம் வழக்­க­மாக 150 வெள்­ளி­யி­லி­ருந்து 180 வெள்ளி வரை இருக்­கும். ஆனால் அக்­டோ­பர் மாதத்­தில் தனது வீட்டு மின்­சா­ரக் கட்­ட­ணம் ஏறக்­கு­றைய இரண்டு மடங்கு கூடி 350 வெள்ளிக்கு அதிகரித்துவிட்டது என்றார். கடந்த ஒன்­பது மாதங்­ க­ளாக ஒட்­டு­மொத்த சந்­தை விலையில் அவர் மின்சாரம் பெற்று வருகிறார்.

"என்­னு­டைய மின்­சா­ரப் பய­னீட்­டில் எந்­த­வித மாற்­ற­மும் இல்லை. ஒட்­டு­மொத்த விலை­யில் கட்­ட­ணம் செலுத்­து­வதை அனுமதித்துள்ள எஸ்பி குழு­மம் விலை உயர்வு குறித்து வாடிக்கையாளர்­க­ளி­டம் தெரி­வித்­தி­ருக்க வேண்­டும்," என்றார் அவர்.

"இது பகல்­நேரக் கொள்­ளை­யாக இருக்­கிறது. சொந்த ஊருக்­குப் பணம் அனுப்­பு­வது, அதி­க­ரித்­துள்ள மின்­சா­ரக் கட்­ட­ணத்தை கட்­டு­வது போன்­ற­வற்­றால் வாழ்க்கை சிர­ம­மாகிவிட்டது," என்றும் மலே­சி­ய­ரான சீ சொன்­னார். மற்­றொரு வாடிக்­கை­யா­ள­ரான 40 வயது டெர்­ரிக் கோ, தனது அடுக்­கு­மாடி வீடு­களில் ஒன்­றுக்கு இரண்டு மடங்­கா­க­வும் மற்­றொரு வீட்டுக்கு மூன்று மடங்­கா­க­வும் அதி­க­ரித்­துள்­ள­தாகக் கூறி­னார்.

"எதிர்­பா­ராத கட்­டண உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். ஒட்­டு ­மொத்த விலை­யில் மின்­சா­ரம் வழங்­கி­ய­தால் சில மாதங்­கள் சேமிக்க முடிந்­தது. இப்­போது விலை கூடி­ய­தால் அந்தச் சேமிப்­பும் இல்­லா­மல் ஆகி­விட்­டது," என்று திரு டெர்­ரிக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!