வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் அறிகுறி

சிங்­கப்­பூ­ரில் ஞாயிற்­றுக்­கி­ழமை புதி­தாக 552 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

புதி­தாக கிருமி தொற்­றி­ய­வர்­களின் எண்­ணிக்கை தொடர்ந்து மூன்­றா­வது நாளாக ஆயி­ரத்­துக்­கும் குறை­வாக உள்­ளது.

புதிதாக கிருமி தொற்­று­யோரில் வெளி­நாட்­டில் இருந்து வந்த ஒரு­வ­ருக்கு ஓமிக்­ரான் வகைக் கிருமி தொற்றி இருக்­க­லாம் என்­பது பூர்­வாங்க பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக அமைச்சு கூறி­யது. சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான அந்த 37 வயது ஆட­வர் டிசம்­பர் 1 புதன்­கி­ழமை அன்று தென் ஆப்­பி­ரிக்­கா­வி­லிருந்து நாடு திரும்­பி­னார்.

ஏற்­கெ­னவே ஓமிக்­ரான் தொற்­றி­ய­தாக நம்­பப்­படும் இரண்டு பேர் பய­ணம் செய்த அதே விமா­னத்­தில் அவ­ரும் இருந்­தார். முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­பட்­டுள்ள அவ­ருக்கு லேசான நோய் அறி­கு­றி­கள் உள்­ளன.

அவ­ருக்­குச் சமூ­கத்­தில் யாரு­ட­னும் தொடர்பு இல்லை என்­றும் அவ­ரால் சமூ­கப் பர­வல் ஏதும் நிக­ழ­வில்லை என்­றும் அமைச்சு தெரி­வித்­தது. அந்த ஆட­வர் தேசிய தொற்­று­நோய் தடுப்பு நிலை­யத்­தில் உள்ள தனிமை வார்­டில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

அவ­ரும் ஓமிக்­ரான் தொற்­றி­ய­தாக நம்­பப்­படும் மற்ற இரு­வ­ரும் வந்த விமா­னத்­தில் இருந்த மற்ற 18 பேருக்­கும் தொற்­றில்லை என்று பரி­சோ­த­னை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அவர்­கள் தனி­மைக்­காப்­பில் உள்­ள­னர்.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரில் ஞாயிற்­றுக்­கி­ழமை மேலும் 13 பேர் கொவிட்-19 தொற்­றி­னால் ஏற்­பட்ட உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் கார­ண­மாக மாண்­டு­விட்­ட­னர். அவர்­கள் 52 வய­துக்­கும் 96 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

அனை­வ­ருக்­கும் வேறு உடல் நலப் பிரச்­சி­னைகள் இருந்­தன. மொத்த மரண எண்­ணிக்கை 759 ஆக உள்­ளது.

வாராந்­திர தொற்­றுப் பர­வல் விகி­தம் 0.66 ஆக இருந்­தது.

புதி­தாக கிருமி தொற்­றிய 552 பேரில் 523 பேர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். 14 பேர் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் வசிப்­ப­வர்­கள். 15 பேர் வெளி­நாட்டி­லி­ருந்து வந்­த­வர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!