கிராமப்புற விலங்குப் பண்ணைகளில் ஆஸ்துமாவுக்கான மருந்து கண்டுபிடிப்பு

ஆஸ்­துமா மற்­றும் இதர ஒவ்­வாமை பிரச்­சி­னை­கள் நேரா­மல் தவிர்க்­கும் வழி, அமெ­ரிக்­கா­வில் வாழும் ஆமிஷ் சமூக சிறாரி­டையே வேரூன்­றி­யுள்­ளது என்று விஞ்­ஞா­னி­கள் நம்­பு­கின்­ற­னர். ஒவ்­வாமை மற்­றும் அது தொடர்­பான பிரச்­சி­னை­கள் கடந்த ஆண்­டு­களில் அதி­க­ரித்­துள்­ள­தாக அண்­மைய ஆய்­வு­கள் தெரி­வித்­துள்­ளன.

உல­கில் 30% சிறா­ருக்கு ஒவ்­வா­மைப் பிரச்­சி­னை­களும் கிட்­டத்­தட்ட 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஆஸ்­துமா, நாசி­ய­ழற்சி ஒவ்­வாமை­யும் ஏற்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் சுகா­தா­ரப் பராமரிப்பு மற்­றும் இதர செலவு­கள் தொடர்­பில் பொரு­ளி­யல் மீது ஆஸ்­துமா ஏற்­ப­டுத்­திய தாக்­கத்­தின் மதிப்பு 1992ல் ஏறத்­தாழ $33.93 மில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக இருந்­தது. தற்­போது அதே ஆஸ்­து­மா­வின் தாக்­கம் $1.5 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ரா­க­லாம் (S$2 பி.) என்று முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, ஆஸ்­துமா மற்­றும் இதர ஒவ்­வாமை பிரச்­சி­னை­கள் ஏற்­படும் சாத்­தி­யம், நக­ரங்­களில் வள­ரும் சிறு­வர்­க­ளைக் காட்­டி­லும் பண்­ணை­களில் வளர்ந்த சிறு­வர்­க­ளுக்­குக் குறை­வாக இருந்­த­தைப் பல ஆண்டு கால­மாகவே அமெ­ரிக்க விஞ்­ஞா­னி­கள் கவ­னித்து வந்­த­னர்.

அதற்கு ஒரு படி மேல் சென்­ற­னர் என்­டி­யு­வின் நன்­யாங் சுற்­றுப்­புற, நீர் ஆராய்ச்­சிக் கழக நிர்­வாக இயக்­கு­நர் டாக்­டர் ஷேன் ஸ்னை­டர் மற்­றும் அவ­ரின் குழு­வி­னர்.

கிரா­மப்­புற விலங்­குப் பண்ணை­களின் தூசி­யில் ஆஸ்­து­மா­வுக்கு எதி­ரான பாது­காப்­பைச் சிறா­ருக்­குத் தரக்­கூ­டிய நான்கு ரசா­ய­னக் கல­வை­களை அவர்­கள் அடை­யாளம் கண்­ட­னர். தற்­போது ஆஸ்­துமா, ஒவ்­வாமை தொடர்­பான மருந்­தைத் தயா­ரிப்­ப­தில் கவ­னம் செலுத்தி வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!