திறனாளர்கள் பற்றாக்குறையால் சம்பளம் அதிகரிக்கும்: ஆய்வு

சிங்­கப்­பூ­ரில் தொழில்­நுட்­பத் திற­னா­ளர்­க­ளின் பற்­றாக்­கு­றை­யால் அவர்­க­ளு­டைய சம்­ப­ளம் கணி­ச­மாக அதி­க­ரிக்­கும் என்று ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

வரும் ஆண்­டில் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தும் நட­வ­டிக்கை சிங்­கப்­பூ­ரில் தீவி­ர­ம­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அப்­போது ஊழி­யர்­கள் வேறு வேலைக்கு மாற விரும்­பு­வார்­கள். தொழில்­நுட்­பத் திற­னா­ளர்­க­ளுக்­கான தேவை­யும் அதி­க­ரிக்­கும் என்று இரண்டு ஆள்­சேர்ப்பு நிறு­வ­னங்­கள் நடத்­திய ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

சில துறை­களில், குறிப்­பாக தொழில்­நுட்­பத் துறை­யில் திற­னா­ளர்­கள் பற்­றாக்­கு­றை­யால் சம்­ப­ளம் கணி­ச­மாக அதி­க­ரிக்­கும் என்று ராபர்ட் வால்­டர்­சின் 2022ஆம்­ ஆண்­டின் சம்­பள ஆய்வு தெரி­வித்­ தது.

ஆனால் எந்த அள­வுக்கு ஊதிய உயர்வு இருக்­கும் என்­பதை அது மதிப்­பீடு செய்­ய­வில்லை.

இருந்­தா­லும் இதர துறை­களிலும் வேறு வேலைக்கு மாறும் ஊழி­யர்­கள் பத்து முதல் 15 விழுக்­காடு வரை சம்­பள உயர்வை எதிர்­பார்ப்­பர் என்கிறது ஆய்வு.

2022ஆம் ஆண்­டில் தொழில்­நுட்­பம் மற்­றும் உரு­மா­றும் துறை­களில் 85 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் சம்­பள உயர்வை வழங்­கும். இது, இதர துறை­க­ளு­டன் ஒப்­பி­டும் ­போது ஆக அதி­க­மாக இருக்­கும். மனி­த­வ­ளத் துறை மட்­டுமே இதற்கு ஈடான சம்­ப­ளத்தை வழங்­கும்.

தொழில்­நுட்­பத் துறை­யில் தரவு அறி­வி­ய­லா­ளர்­கள் அல்­லது ெபாறி­யா­ளர்­கள், இணை­யப் பாது­காப்பு நிபு­ணர்­கள், முன்­னிலை, பின்னிலை ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்­கான தேவை அதி­க­மாக இருக்­கும்.

இதற்கு அடுத்­த­தாக வர்த்­தக நிதித் துறை­யில் திற­னா­ளர்­கள் கிடைப்­பது சிர­ம­மாக இருக்­கும் என்று ஆய்வு தெரி­வித்­தது.

இத்­து­றை­யில் வர்த்­த­கக் கட்­டுப் ­பாட்­டா­ளர்­கள், மூத்த நிதிப் பகுப்­பாய்­வா­ளர்­கள், நிதி நிபு­ணர்­கள் ஆகி­யோ­ருக்­குத் தட்­டுப்­பாடு இருக்­கும்.

கொள்­ளை­நோய் சூழ­லி­லி­ருந்து நிறு­வ­னங்­கள் மீண்டு வரு­வ­தால் அதற்கு முந்­தைய நில­வ­ரத்­துக்கு ஏற்ப சம்­ப­ளத்தை சரி செய்து வரு­கின்­றன.

இதனால் நிதி, வர்த்­த­கத் துறை­யில் முக்கிய திற­னா­ளர்­கள், நிதி வல்­லு­நர்­கள் உள்­ளிட்­டோர் இரு­பது முதல் நாற்­பது விழுக்­காடு வரை ஊதிய உயர்வை எதிர்­பார்க்­க­லாம் என்று ஆய்­வு குறிப்­பிட்­டது.

ராண்ட்ஸ்­டாட் சிங்­கப்­பூர் வெளி­யிட்ட 2022ஆம் ஆண்­டின் சந்தை முன்­னோட்ட, சம்­பள ஆய்­வில் அதிக அளவு வளர்ச்­சி­ய­டை­யும் தக­வல் தொழில்­நுட்­பம், தயா­ரிப்பு மற்­றும் விநி­யோ­கிப்பு, வங்கி மற்­றும் நிதிச்­சே­வை­கள், காப்­பு­றுதி ஆகிய நான்கு துறை­கள் ஆரா­யப்­பட்­டன.

2021ல் கிரு­மிப் பர­வல் கார­ண­மாக தொழில்­நுட்­பங்­க­ளின் பயன் ­பாடு அதி­கரித்ததால் திற­னா­ளர் ­க­ளின் தேவை­யும் கூடி­யது என்று ஆய்வு தெரி­வித்­தது.

"2022ஆம் ஆண்­டி­லும் திற­னா­ளர்­க­ளின் தேவை அதி­க­ரிக்­கும்," என்று 'ராண்ட்ஸ்­டாட் சிங்­கப்­பூர்' தொழில்­நுட்­பப் பிரி­வின் மூத்த இயக்­கு­ந­ரான தல்­ஜித் சால் தெரி­வித்­தார்.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தா­லும் தொழில்­நுட்­பத் துறை ஊழி­யர்­கள் வேலை­களை மாற்­று­வ­தா­லும் அடுத்து வரும் ஆண்­டு­களில் திற­னா­ளர்­க­ளி­டை­யி­லான மாற்­றம் உலக அள­வில் துரி­த­ம­டை­யும் என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!