12 வயது சிறுவன் உட்பட 189 சந்தேகநபர்கள் விசாரணையில்

உரி­மம் இல்­லா­மல் பணம் கொடுக்­கல்-வாங்­கல் தொழி­லில் ஈடு­பட்ட சந்­தே­கத்தின் பேரில் மொத்­தம் 189 பேரைக் காவல்­துறை அதி­கா­ரி­கள் விசாரித்து வரு­கி­றார்­கள். அவர்­களில் 12 வய­துள்ள சிறு­வன் உட்பட 78 வயது வரையிலான பல­ரும் அடங்­கு­வர்.

பணம் கடன் வாங்­கி­ய­வர்­க­ளின் வீடு­க­ளுக்­குச் சென்று அவர்­களை அலைக்­க­ழிக்­கும் செயல்­க­ளி­லும் சந்­தே­க­ந­பர்­கள் ஈடு­பட்டு இருக்­கிறார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

காவல்­துறை அதி­கா­ரி­கள் நவம்­பர் 22ஆம் தேதிக்­கும் டிசம்­பர் 3ஆம் தேதிக்­கும் இடை­யில் தீவு முழு­வதும் இரண்­டு­ வார கால சோதனை­களை நடத்­தி­னார்­கள். அந்த நட­வடிக்­கை­களில் சந்­தே­க­ந­பர்­கள் சிக்­கி­னர். பிடி­பட்­ட­வர்­களில் 16 பேர் பல­ரின் வீடு­க­ளுக்­குச் சென்று அலைக்­க­ழிப்பு காரி­யங்­களில் ஈடு­பட்டுள்ளனர் என்று கூறப்­ப­டு­கிறது.

37 சந்­தே­க­ந­பர்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக வட்­டிக்குப் பணம் கொடுக்கும் செயல்­களில் எடு­பி­டி­க­ளாக வேலை செய்து பணத்தை ஏடி­எம் இயந்­திரங்­கள் மூலம் மாற்­றி­விட்டு இருக்­கி­றார்­கள் என்று நம்­பப்­ப­டு­கிறது.

ஒரு­வர், சட்­ட­வி­ரோ­த­மாக வட்டிக்குப் பணம் கொடுத்த ஒரு­வ­ரி­டம் பொய்த் தக­வல்­களை கொடுத்து இருக்­கி­றார் என்று நம்­பப்­ப­டு­கிறது. இதனால் வேறு ஒரு­வருக்­குத் தொல்லை ஏற்­பட்டு இருப்­ப­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது. இதர 135 சந்­தே­க­நபர்­களும் வங்­கி­களில் கணக்­குத் திறந்து தங்­க­ளு­டைய ஏடி­எம் அட்டை விவ­ரங்­களை உரி­மம் பெறாத லேவா­தே­விக்­கா­ரர்­க­ளி­டம் கொடுத்து இருக்­கி­றார்­கள் என்று நம்­பப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!