'உயிர்பயம் வந்துவிட்டது' - பூமலையில் நீர்நாய்கள் தாக்கிய ஆடவர்

பூமலைக்குச் சென்ற ஒருவரை அங்குள்ள நீர்நாய்கள் தாக்கியதில் அவருடைய கால்கள், கைவிரல், பிட்டங்களில் காயங்கள் ஏற்பட்டன.

கிரஹேம் ஜார்ஜ் ஸ்பென்சர் என்ற இந்த ஆடவருக்கு 20க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டன.

மருத்துவமனை சிகிச்சை பெற்று, காயங்கள் சிலவற்றுக்குத் தையல் போட வேண்டியிருந்தது.

60 வயதுகளில் இருக்கும் பிரிட்டிஷ்காரரான திரு கிரஹேம், சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவார்.

இந்தச் சம்பவம் கடந்த மாதம் 30ஆம் தேதி காலை 6.40 மணியளவில் நிகழ்ந்தது.

சம்பவம் பற்றி விவரித்த திரு கிரஹேம், “நான் இறந்துவிடுவேனோ என்று உண்மையிலேயே அஞ்சினேன். அவை என்னைக் கொல்லப்போகின்றன என்றே நினைத்தேன்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

நண்பர் ஒருவருடன் சேர்ந்து வழக்கமான அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார் திரு கிரஹேம்.

பூமலையின் நுழைவாயிலில் சிறிது தூரத்தில் ஏறக்குறைய 20 நீர்நாய்கள் மங்கலான விளக்கொளியில் ஒரு பாதையைக் கடப்பதைக் கண்டதாகச் சொன்னார் திரு கிரஹேம்.

முதலில் அவை அமைதியாகவே நடந்து சென்றன.

ஆனால் யாரோ ஒருவர் தங்களை நோக்கி ஓடி வந்ததைக் கண்டதும் அவை பித்து பிடித்ததுபோல் ஆயின என்றார் திரு கிரஹேம்.

தங்களை நோக்கி ஓடிய அந்த ஆடவரை நீர்நாய்கள் கடிக்க முயன்றதாகவும் இவர் சொன்னார்.

ஆனால், முதலில் சென்ற நபர் எப்படியோ தப்பிவிட, நீர்நாய்கள் தம்மீது கவனம் தம் மேல் திரும்பியதாக திரு கிரஹேம் கூறினார்.

“அந்த ஆடவர் நான்தான் என்று அவை நினைத்திருக்க வேண்டும்,” என்ற இவர், அவை தன்னைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியதாகவும் சொன்னார்.

அருகில் இருந்த தம் நண்பர் உரக்கக் கத்தி கூச்சல் போடவும், அவை ஒரு கணம் தங்கள் தாக்குதலை நிறுத்தியதாக திரு கிரஹேம் குறிப்பிட்டார்.

பின்னர் தாங்கள் இருவரும் ஓட்டம்பிடிக்க, நீர்நாய்கள் சிறிது தொலைவு தங்களைத் துரத்தின.

இதற்கு முன்னரும் நீர்நாய்கள், மனிதர்களைத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், வழக்கமாக அவை மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதில்லை என்றும் ஆபத்து ஏற்படக்கூடும் என்று கருதும்போதுதான் அவை தாக்கக்கூடும் என்றும் விலங்குநல அமைப்புகள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!