தந்தையர் விடுப்பு நாள்களை உயர்த்திய நிறுவனங்கள்

சம்­ப­ளத்­து­ட­ன் கூடிய தந்­தை­யர் விடுப்பு சலு­கை­களை அடுத்த ஆண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து இரண்டு வாரங்­க­ளி­லி­ருந்து நான்கு வாரங்­க­ளுக்கு உயர்த்த சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் சுவீ­டன் நாட்­டைச் சேர்ந்த ஒன்­பது பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் உறுதி அளித்­துள்­ளன.

மருந்­தி­யல் நிறு­வ­னம் ஆஸ்ட்­ரா­ஸெ­னகா, ஆடை­கள் விற்­பனை நிறு­வ­ன­மான எச் அண்ட் எம் ஆகிய நிறு­வ­னங்­கள் அவற்­றில் அடங்­கும்.

#டபுள்­அப் பிளேஜ் எனும் இத்­திட்­டம் பாலி­னச் சமத்­து­வத்தை ஊக்­கு­விக்க இலக்கு கொண்­டுள்­ளது. புதி­தா­கப் பிறக்­கும் குழந்­தை­களைத் தாய்­மார்­கள் மட்­டும் பார்த்­துக்­கொள்­ளா­மல் தந்­தை­ய­ரும் தங்­கள் பொறுப்­பு­களை செவ்­வனே ஆற்ற கூடு­தல் தந்­தை­யர் விடுப்பு வழங்­கப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் சுவீ­டிஷ் வர்த்­த­கச் சபை நேற்று தெரி­வித்­தது.

இந்­தத் திட்­டத்­துக்கு சுவீ­டன் நாட்­டைச் சேர்ந்த மரக்­கல நிறு­வ­ன­மான 'இக்­கியா' முக்­கிய கார­ணம். 2017ஆம் ஆண்­டில் அதன் ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளத்

து­ட­ன் கூடிய தந்­தை­யர் விடுப்பை இரண்டு வாரங்­க­ளி­லி­ருந்து நான்கு வாரங்­க­ளுக்கு அந் நிறுவனம் உயர்த்­தி­யது.

தற்­போ­தைய சிங்­கப்­பூர் சட்­டப்­படி, வேலை செய்­யும் தந்­தை­மார்­க­ளுக்கு அர­சாங்­கம் வழங்­கும் சம்­ப­ளத்­து­ட­னான இரு வாரத் தந்­தை­யர் விடுப்­புச் சலுகை உள்­ளது.

தாய்­மார்­க­ளுக்கு 16 வாரங்­கள் சம்­ப­ளத்­து­ட­ன் கூடிய விடுப்பு வழங்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக வீட்­டில் கண­வன், மனைவி ஆகி­யோ­ரின் பங்­க­ளிப்பு முறை மாறி­யி­ருப்­ப­தாக ஆஸ்ட்­ரா­ஸெ­னகா­வின் சிங்­கப்­பூர் பிரி­வின் தலை­வர் திரு வினோத் நாரா­ய­ணன் தெரி­வித்­தார்.

"குடும்பப் பங்­க­ளிப்பு முறை­யில் மேலும் அதி­க­மா­னோர் மாற்­றங்­க­ளைத் தழு­வு­கின்­ற­னர். குழந்­தை­யின் முதல் சில மாதங்­களில் பரா­ம­ரிப்­புப் பொறுப்­பு­களில் தந்தை­ மார்­கள் கூடு­தல் பங்களிக்க ஏது­வாக கூடு­தல் தந்­தை­யர் விடுப்பு வழங்கி ஊக்­க­விக்க இதுவே நிறு­வ­னங்­க­ளுக்­குச் சரி­யான நேரம்," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!