சிறார்களுக்கே உரிய சிறப்புகளுடன் 2022 டிசம்பரில் சிங்கப்பூர் சிறார் அரும்பொருளகம் திறப்பு

சிறார்­க­ளுக்கே அர்ப்­ப­ணிக்­கப்­பட்ட சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது அரும்­பொ­ரு­ள­கம் அடுத்த டிசம்­ப­ரில் பார்­வை­யா­ளர்­க­ளுக்குத் தன் கதவுகளைத் திறக்­கும்.

அந்த அரும்­பொ­ரு­ள­கம், முன்­னாள் சிங்­கப்­பூர் அஞ்­சல்­தலை அரும்­பொருளகத்தில் அமைந்து இருக்­கும். 12 மற்­றும் அதற்­கும் குறைந்த வய­துள்ள சிறார்­க­ளைக் கொண்ட குடும்­பங்­களைக் கவர்ந்து ஈர்ப்­பது புதிய அரும்­பொ­ரு­ள­கத்­தின் இலக்­காக உள்­ளது.

'சிங்­கப்­பூர் சிறார் அரும்­பொ­ரு­ள­கம்' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தப் புதிய காட்சிக்கூடத்­தின் பின்­ன­ணி­யில் உள்ள குழு­வி­னர் அது பற்றி அண்­மை­யில் விளக்­கம் அளித்­த­னர்.

அத­னு­டைய சின்­னத்­தை­யும் 'வியப்­பு­டன் தொடக்­கம்' என்ற அடை­யாள வாச­கத்­தை­யும் அந்­தக் குழு வெளி­யிட்­டது.

சிறார் அரும்­பொ­ரு­ள­கம் பற்றி நாடாளு­மன்­றத்­தில் 2020ல் முதன்­மு­த­லாக அறி­விக்­கப்­பட்­டது. அப்­போது கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­ச­ராக இருந்த கிரேஸ் ஃபூ அது பற்றி அறி­வித்­தார்.

அந்த அரும்­பொ­ரு­ள­கம் இந்த ஆண்டில் திறக்­கப்­பட இருந்­தது. ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்று கார­ண­மாக பணி­கள் தாம­த­ம­டைந்­து­விட்­டன.

கோல்­மென் ஸ்தி­ரீட்­டில் இரண்டு மாடி கட்­ட­டத்­தில் அடுத்த ஆண்டு டிசம்­ப­ரில் அந்த அரும்­பொ­ரு­ள­கம் திறக்­கப்­ப­டும்­போது அதில் உள்­ளூர் மற்­றும் வட்­டார பாரம்­ப­ரிய அடிப்­ப­டை­யி­லான கண்­கொள்ளா காட்சி அம்­சங்­கள் நிரம்பி இருக்­கும்.

உட­லு­ழைப்பு ஊழி­யர்­கள் பயன்­ப­டுத்­திய கன­மான சாக்கு மூட்­டை­க­ளைச் சிறார்­கள் தூக்கிப் பார்க்­க­லாம்.

சிங்­கப்­பூர் அஞ்­சல்­தலை அரும்­பொரு­ள­கத்­தின் அஞ்­சல்­தலை தொகுப்­பு­களும் காட்­சிக்கு இடம்­பெற்று இருக்­கும்.

"பொது­வாக பெரி­ய­வர்­க­ளுக்­கான அரும்­பொ­ரு­ள­கத்­தில் உள்ள எந்த பொரு­ளை­யும் தொடக்­கூ­டாது என்று சிறார்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­லப்­படும். ஆனால் இந்த அரும்­பொ­ரு­ள­கத்­தில் தய­வு­செய்து தொட்டுப் பார்த்து அனு­ப­வி­யுங்­கள் என்று நாங்­கள் சிறார்­க­ளி­டம் எடுத்­துக் கூறு­வோம்," என புதிய அரும்­பொ­ரு­ள­கத்­தின் இயக்­கு­ந­ரும் தலைமை நிர்­வா­கி­யுமான திரெஸ்­னா­வதி பிரி­காடி தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் சிறார் அரும்­பொ­ரு­ள­கத்திற்கு ஆண்டு முழு­வ­தும் சிறார்­கள் வர­லாம் என்று திரு­வாட்டி பிரிகாடி கூறி­னார்.

சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் நுழைவு இல­வ­சம் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இளம்­ப­ருவ கல்­வி­யா­ளர்­கள், பெற்­றோர், சிறார்­க­ளி­டம் கருத்­து­களைக் கேட்டு புதிய அரும்­பொ­ரு­ள­கம் உரு­வாக்­கப்­பட்டு இருப்­பதாக அவர் தெரி­வித்­தார்.

புதிய அரும்­பொ­ரு­ள­கத்­தில் பணி­யாற்­றும் ஊழி­யர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் முன்­னாள் சிங்­கப்­பூர் அஞ்­சல்­தலை அரும்­பொ­ரு­ள­கத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­பார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!