விலங்குநலம் பேண ஆர்த்தி ஆசை

கி.ஜனார்த்­த­னன்

சிறுவயதிலேயே தமது வீட்டில் நாய் ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்த குமாரி ஆர்த்தி சங்கர், அப்போது முதல் விலங்குகளின் நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கிவிட்டார்.

இப்­போது 34 வய­தா­கும் குமாரி ஆர்த்தி புதி­தாக வழி­ந­டத்­தும் சிங்­கப்­பூர் விலங்­கு­வ­தைத் தடுப்­புச் சங்­கத்­தில் 200க்கும் மேற்­பட்ட விலங்­கு­கள் இவ­ரது பரா­ம­ரிப்­பில் உள்­ளன.

மக்­கள் கழ­கத்­தில் 10 ஆண்டு­களுக்குமேல் பல்­வேறு பொறுப்­பு­களை வகித்து வந்த குமாரி ஆர்த்தி, கடந்த மாதம் விலங்­கு­வதைத் தடுப்­புச் சங்­கத்­தின் நிர்­வாக இயக்­கு­நரா­கப் பொறுப்­பேற்­றுக்­கொண்­டார்.

மக்­க­ளி­டையே குறிப்­பிட்ட பிரிவு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கான வச­தி­யைக் கொண்­டுள்ள 'இம்­பேக்ட் அட் ஹோங் லிம் கிரீன் பார்க்'கில், பல்­வேறு தொண்­டூ­ழிய அமைப்­பு­க­ளு­டன் வலு­வான தொடர்பை ஏற்படுத்தியிருக்கும் இவர், கால காலத்திற்கும் சங்­கத்­தின் நற்­செ­யல்­க­ளைத் தொடர விரும்பு­கி­றார்.

"விலங்­கு­நல ஆர்­வ­லர்­கள் என்ற வட்­டத்­தைத் தாண்டி அனை­வ­ருமே விலங்­கு­ந­லம் பேணு­தலை அவர்­களின் வாழ்­வி­ய­லில் புகுத்­து­வதே எங்­க­ளது முக்­கிய இலக்­கு­களில் ஒன்­றாக இருக்­கும்," என்று இவர் சொன்­னார்.

கொவிட்-19 கிரு­மிப்­ ப­ர­வ­லால் சமூ­கத்­தில் வசதி குறைந்­தோ­ருக்கு உரிய வளங்­க­ளைத் திரட்­டு­வ­தில் கொண்­டுள்ள தமக்­குள்ள அனு­பவத்­தையே தமது பல­மா­கக் கருது­கி­றார் குமாரி ஆர்த்தி.

கிரு­மிப்­ ப­ர­வ­லால் விலங்­கு­களுக்கு உண­வுத் தட்­டுப்­பாடு ஏற்­படு­வ­தைத் தடுக்க செல்­லப் பிராணி உரி­மை­யா­ளர்­களுக்­கும் பொது­மக்­களால் பரா­மரிக்­கப்­படும் 'சமூக' விலங்­கு­களுக்கு உணவு அளிப்­ப­வர்­க­ளுக்­கும் இந்த வளங்­க­ளைப் பயன்­படுத்­தப்­போ­வ­தா­கத் தெரி­வித்­தார்.

1,832 விலங்­கு­க­ளுக்கு உண­வு அ­ளிக்­கும் இந்தச் செல்­லப் பிராணி உணவு ஆத­ர­வுத் திட்­டம், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் விரிவு கண்டது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பர­வத் தொடங்­கிய சென்ற ஆண்­டில் அவ­சர மீட்­புப் பணி­க­ள் மூல­மாக சங்­கத்­திற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட விலங்­கு­க­ளின் எண்­ணிக்கை 995. இந்த எண்­ணிக்கை இப்போது 944ஆகக் குறைந்துள்ளது.

கைவி­டப்­பட்­ட­தாகச் சந்­தே­கிக்­கப்­பட்டு, சங்­கத்­தில் சேர்க்­கப்­பட்ட விலங்­கு­க­ளின் எண்­ணிக்கை 2020ல் 56ஆக இருந்­தது. இப்­போது அந்த எண்­ணிக்கை 41ஆகக் குறைந்­துள்­ளது.

சங்­கத்­தி­லி­ருந்து தத்­தெ­டுக்­கப்­பட்ட விலங்­கு­க­ளின் எண்­ணிக்கை 2020ல் 732ஆக­வும் 2021ல் 717 ஆக­வும் உள்­ளது.

ஆயி­னும், இந்த எண்­ணிக்கை வித்­தி­யா­சங்­க­ளைக் கண்டு, ஒரு குறு­கிய முன்­யோ­ச­னைக்கு வரா­மல், அவற்றை நடு­நி­லை­யு­டன் பார்க்­கும்­படி குமாரி ஆர்த்தி கேட்­டுக்­கொண்­டார்.

"தத்­தெ­டுப்­பதை ஊக்­கு­விப்­ப­தும் விலங்­கு­கள் கைவி­டப்­ப­டு­வதை முடிந்­த­வரை தடுப்­ப­தும் சங்­கத்­தின் முக்­கிய நோக்­கங்­களில் ஒன்று," என்­கி­றார் இவர்.

இச்­சங்­கம் ஓர் அர­சு­சாரா அமைப்பு என்­ப­தால் மானி­யங்­கள் அவ்­வப்­போது கிடைத்­தா­லும் தொடச்­சி­யான நிதி­யு­தவி எது­வும் கிடை­யாது என்­ப­தைப் பொது­மக்­களுக்கு நினை­வுப­டுத்த விரும்­பு­கிறார் குமாரி ஆர்த்தி.

பெரும்­பா­லும் 'எஸ்­பி­சிஏ' நன்­கொ­டை­களை நம்­பி­யி­ருக்க வேண்­டி­யுள்­ள­தாக இவர் சொன்­னார்.

தொழில்­நுட்ப, சமூக ஊடக உத்­தி­கள் இந்த முயற்­சிக்­குப் பெரி­தும் கைகொ­டுத்­தி­ருப்­ப­தா­க­வும் இவர் கூறினார்.

நிதித்­தி­ரட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் இளை­யர்­க­ளின் யோச­னை­களை­யும் பங்­க­ளிப்­பு­க­ளை­யும் வர­வேற்­ப­தா­க­வும் குமாரி ஆர்த்தி தெரி­வித்­தார்.

விலங்­கு­வ­தைச் சங்­கத்­திற்கு பல்­வேறு விலங்­கு­கள் அபா­ய­க­ர­மான நிலை­யில் அனுப்­பப்­ப­டு­வ­தை இவர் சுட்டினார்.

தங்­கள் வச­முள்ள விலங்­கு­நல மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் முடிந்­த­வரை முயன்று வந்­தா­லும் பொதுமக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு அதி­க­ரிக்­க­ வேண்­டும் என்­கி­றார் இவர்.

"சிலர் வீட்­டுச் சன்­னல்­களில் வலைத்­த­டுப்­பு­க­ளைப் பொருத்­தா­த­தால் பூனை­கள் உய­ரத்­தி­லி­ருந்து கீழே விழ நேரி­டு­கிறது. இத்­த­கைய ஆபத்­து­க­ளைக் குறைப்­ப­தற்­கான இயக்­கங்­கள் விரி­வு­ப­டுத்­தப்­படும்," என்­றார் உயிர்­நே­ய­மிக்க குமாரி ஆர்த்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!