குணமடைந்த நோயாளிகளுக்கான கருணைக் காலம் குறைப்பு

கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்த, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தவர்­க­ளுக்­கான கருணை 2022 ஜன­வரி 1 முதல் 180 நாள்­க­ளா­கக் குறைக்­கப்­ப­டு­கிறது. நோய் தொற்­றிய பின்­னர் அவர்­க­ளுக்கு விலக்கு அளிக்­கப்­படும் காலம் தற்­போது 270 நாள்­

க­ளாக உள்­ளது. மேலும், சிங்­கப்­பூ­ரில் மேற்­கொள்­ளப்­பட்ட பிசி­ஆர் பரி­சோ­தனை முடி­வில் நோய் தொற்­றி­ய­தாக உறுதி செய்­யப்­பட்ட நாளில் இருந்து இது தொடங்­கும் என்­றும் நேற்று மெய்­நி­கர் வாயி­லாக அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஓமிக்­ரான் தொற்­றாக உரு­மா­றிய கிருமி மூலம் மறு­தொற்று ஏற்­படும் அபா­யம், அந்­தக் கிரு­மி­யின் பர­வல் வேகம் ஆகி­யன மீது எழுந்­துள்ள கவ­லை­க­ளைத் தொடர்ந்து இந்த மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத நிலை­யில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்டு குண­ம­டைந்­த­வர்­கள் தங்­க­ளுக்­கான தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்ள முன்­வ­ர­வேண்­டும் என்­றும் அமைச்சு வலி­யு­றுத்தி உள்­ளது. அத்­த­கை­யோர் தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் ஃபைசர் அல்­லது மொடர்­னா­வின் ஒரு தடுப்­பூ­சியை மட்­டும் போட்­டுக்­கொண்­டால் போதும். அல்­லது சினோ­வேக் தடுப்­பூ­சியை இரு­முறை போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

மேலும் அவர்­கள் ஜன­வரி 17ஆம் தேதிக்­குள் தடுப்­பூசி போட்டு முடித்­தால்­தான் இரு வாரங்­கள் கழித்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­

க­ளாக ஜன­வரி 31ஆம் தேதி முதல் கரு­தப்­ப­டு­வார்­கள்.

2022 ஜன­வரி 1க்கு முன் குண­

ம­டைந்த, தடுப்­பூசி பேட்­டுக்­கொள்­ளா­தோ­ருக்­கும் கருணை காலம் 180 நாள்­க­ளா­கக் குறைக்­கப்­படும்.

இதற்­கி­டையே, புதிய வகைத் தொற்று உரு­வாகி இருப்­ப­தால் கொவிட்-19 அடிப்­படை தடுப்­பூ­சிக் கட்­ட­மைப்பை மூன்று தடுப்­பூ­சி­கள் கொண்­ட­தாக நடத்­தப்­பட வேண்­டிய அவ­சி­யம் உள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!