அரசாங்க கருத்துத்தெரிவிப்பு பிரிவு ‘ரீச்’ மூலம் 70,000 பேரை சென்றடைய முடிந்தது

அர­சாங்­கத்­தின் கருத்­துத்­தெ­ரி­விப்­புப் பிரி­வாக இயங்கி வரும் 'ரீச்', அதன் நேரடி கருத்­துத்­தெ­ரி­விப்பு அமர்­வு­க­ளைக் கொள்­ளை­நோய் சூழ­லில் நடத்த முடி­ய­வில்லை. இருப்­பி­னும், வெவ்­வேறு தளங்­க­ளின் மூலம் அது மக்­களிட­மி­ருந்து கருத்­துத் திரட்ட முயன்­ற­தால் 70,000க்கும் மேற்­பட்­டோரை இவ்­வாண்டு சென்­ற­டைய முடிந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு 56,000 பேர் கருத்து தெரி­வித்­தி­ருந்­த­னர் என்று

'ரீச்' தலை­வர் டான் கியட் ஹாவ் குறிப்­பிட்­டார். இணை­யத்­த­ளம் வழி­யா­க­வும் 'வாட்ஸ்­அப்', 'டிக்­டாக்', 'கிளப்­ஹ­வுஸ்' தளங்­கள் வழி­யா­க­வும் அமைப்பு கருத்து திரட்­டி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

கருத்து திரட்­டின்­போது வீட்­டில் இருந்­த­வாறு கற்­றல், சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் சந்­திக்­கும் அழுத்­தம் ஆகி­யவை முக்­கி­ய­மா­கப் பேசப்­பட்­ட­தாக திரு டான் கூறி­னார்.

இவ்­வாண்டு மே மாதத்­தில் வீட்­டில் இருந்து கற்­பது குறித்து அறி­விக்­கப்­பட்­ட­போது மூன்று நாள்­களில் 200,000 பெற்­றோர்­கள் தங்­க­ளின் கருத்­து­க­ளைத் தெரி­விக்க முன்­வந்­த­தாக தொடர்பு, தக­வல் துணை அமைச்­ச­ரும் தேசிய வளர்ச்சி துணை அமைச்­சரு­மாக உள்ள திரு டான் குறிப்­பிட்­டார்.

பெயர் குறிப்­பிட விரும்­பாத 600க்கும் மேற்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளி­டையே நடத்­தப்­பட்ட கருத்­துத் தெரி­விப்­பில் பல உண்­மை­கள் வெளிப்­பட்­ட­தா­க­வும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

களைப்பு, தவிப்பு, அழுத்­தம், கவலை போன்ற உணர்­வு­கள் அவர்­கள் அவர்­க­ளி­டம் கூறி­ய­தில் வெளிப்­பட்­டன.

இளை­யர்­கள், 'பிஎம்இ' எனப்­படும் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள் மற்­றும் சிறு­பான்மை இனத்­த­வர் ஆகி­யோர் மீது அடுத்த ஆண்டு ரீச் கவ­னம் செலுத்த உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!