வெளிநாட்டு ஊழியர் முகம் மலரச் செய்த காற்பந்துக் குழு

கிறிஸ்­மஸ் கொண்­டாட்­டங்­க­ளை­யும் அனைத்­து­லக குடி­பெ­யர்ந்­தோர் தினத்­தை­யும் ஒட்டி சிங்­கப்­பூர் பிரி­மி­யர் காற்­பந்து லீக் அணி­யான தெம்­ப­னிஸ் ரோவர்ஸ், 980க்கும் அதி­க­மான வெளி­நாட்டு ஊழி­யர்­

க­ளுக்கு அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்கி தனது ஆத­ர­வை­யும் மகிழ்ச்­சி­யை­யும் வெளிப்­ப­டுத்தி உள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் சமூக நட­மாட்­டத்­திற்கு தற்­போது விதிக்­கப்­பட்­டுள்ள கடும் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இடையே அந்­தக் கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்றி இந்­நி­கழ்வு நடந்­தே­றி­யது.

தெம்­ப­னிஸ் ரோவர்ஸ் அணி­யைச் சேர்ந்த இரு விளை­யாட்­டா­ளர்­களும் பணி­யா­ளர்­களும் வெளி­நாட்டு ஊழி­யர் கேளிக்கை நிலை­யத்­திற்­குச் சென்று 'கோஸ்­டல் டார்­மிட்­ட­ரி'­யைச் சேர்ந்த ஊழி­யர்­

க­ளுக்கு அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்­கி­னர்.

விளை­யாட்டு ரசிகர் டி-சட்டை, 10 வெள்ளி மதிப்­பு­டைய ஈஸி­லிங் பயண அட்டை, 'எச்2ஓ' இனிப்­புப் பானங்­கள் உள்­ளிட்­டவை அந்தப் பைகளில் வைத்து ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

இந்­தக் காற்­பந்து அணி முதன்­மு­த­லாக நிறை­வேற்­றி­யுள்ள இத்­திட்­டம், சிங்­கப்­பூர் சமு­தா­யத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு இருக் கும் மதிப்பை நினை­வுகூரும் என தாம் நம்­பு­வ­தாக அந்த அணி­யின் தலை­மைப் பயிற்­று­விப்­பா­ளர் கெவின் லீ தெரி­வித்­தார்.

"கடு­மை­யான சூழ­லி­லும் இந்த ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரின் உள்­கட்­ட­மைப்­புக்கு ஆற்­றி­யுள்ள பங்­க­ளிப்பை நான் பெரி­தும் மதிக்­கி­றேன்," என்று தெம்­ப­னிஸ் ரோவர்ஸ் அணி­யின் 22 வயது காற்­பந்து வீரர் அமி­ருல் ஹைக்­கல் கூறி­னார்.

கடந்த ஈராண்­டு­க­ளாக குடும்­பத்­தி­ன­ரைக் காண இய­லாத ஊழி­யர்­க­ளுக்கு உற்­சா­க­மூட்­டும் பணி­களில் ஈடு­பட்ட தெம்­ப­னிஸ் ரோவர்ஸ் அணி­யி­ன­ரின் நற்­செ­யல்­களை வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யத்­தின் தொழிற்­சங்க, பணித்­திட்ட தலை­வர் சதீஷ் நாயுடு பாராட்­டி­னார்.

"சவால்­மிக்க கொவிட்-19 கால­கட்­டத்­தில் இந்த உதவி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

"விளை­யாட்டு, கேளிக்கை நட­வ­டிக்­கை­க­ளுக்கு இன்­னும் கூடு­த­லான ஒத்­து­ழைப்பை நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம்," என்று திரு சதீஷ் கூறி­னார்.

எஸ் லீக்­கைத் தொன்­று­தொட்டு ஆத­ரித்­து­வ­ரும் 'எச்2ஓ' மற்­றும் 'இயோஸ்' இனிப்­பு பான நிறு­வ­னங்­களும் வெளி­நாட்டு ஊழி­யர் ஆத­ரவு முயற்­சி­யில் பங்­க­ளித்­தது குறித்து தாம் மகிழ்­வ­தாக தெம்

பனிஸ் ரோவர்ஸ் அணி­யின் கோல் காப்­பா­ளர் வில்­லி­யம் பாங் தெரி­வித்­தார்.

காற்­பந்­துக் குழு தங்­களை மகிழ் வித்­தது குறித்து வெளி­நாட்டு ஊழி யர்­கள் சிலர் தங்­க­ளது நன்­றியை வெளிப்­ப­டுத்­தி­னர்.

தமி­ழ­கத்­தின் சேலம் மாவட்­டம் ஆத்­தூ­ரைச் சேர்ந்த மாதேஸ்­வ­ரன் மணி­கண்­டன்,34, தமிழ் முர­சி­டம் கூறு­கை­யில், விடு­திக்­குள் அடை­பட்­டி­ருப்­ப­தால் ஏற்­படும் மன­உ­ளைச்­சலை இது­போன்ற அன்­ப­ளிப்­புப் பொருள்­கள் ஓர­ளவு தணிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"எனக்­கும் மற்ற ஊழி­யர்­கள் பல­ருக்­கும் வழங்­கப்­பட்ட விளை­யாட்டு டி-சட்டை மிக­வும் பிடித்­துள்­ளது," என்று ஓட்­டு­ந­ரா­கப் பணி­பு­ரி­யும் அவர் கூறி­னார்.

கிறிஸ்­மஸ் தினத்தை வழக்­கம் போல கொண்­டாட இய­லாத சூழ­லில் அன்­ப­ளிப்­புப் பைகள் ஊழி­யர்­க­ளுக்கு சற்று தெம்­பை­யும் மகிழ்ச்­சி­யை­யும் அளித்­தி­ருப்­ப­தாக மதுரை மாவட்­டம் கோச்­ச­டை­யைச் சேர்ந்த குழந்தை ஜோசப் நெல்­சன் கூறி­னார். அவ­ரும் இங்கு ஓட்­டு­ந­ராக வேலை செய்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!