பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படலாம்

பொருள்­க­ளுக்­கும் சேவை­க­ளுக்­கும் முன்­கூட்­டியே கட்­ட­ணம் செலுத்­தும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கூடு­தல் பாது­காப்பு தேவை என்று சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தின் தலை­வர் மெல்­வின் யோங் கூறி­யுள்­ளார். 2019ஆம் ஆண்­டி­லி­ருந்து பய­னீட்­டா­ளர்­கள் மூன்று மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகையை இழந்­துள்­ள­தாக பய­னீட்­டா­ளர் சங்­க­த்­தின் தக­வல்­கள் தெரி­வித்­தன.

நொடித்­துப்போன நிறு­வ­னங்­களுக்­குப் பய­னீட்­டா­ளர்­கள் ஆயி­ரக்­க­ணக்­கில் கட்­ட­ணம் செலுத்­தி­யி­ருக்­க­லாம். அத்­த­கை­யோ­ருக்­குத் தற்­போது நடப்­பில் இருக்­கும் சட்டங்­கள் போது­மான பாது­காப்பை வழங்­கா­மல் இருக்கலாம் என்று திரு யோங் குறிப்­பிட்­டார்.

பொது­வாக நொடித்­துப்போன நிறு­வ­னங்­கள் முத­லில் ஊழி­யர்­களுக்­குத் தர­வேண்­டிய தொகை­யைக் கொடுக்­கும், கடன் வழங்­கிய வங்­கி­கள் போன்­ற­வற்­றி­டம் பணத்­தைத் திரும்­பித் தரும். அதற்­குப் பிறகு எஞ்­சி­யுள்ள தொகை­தான் வாடிக்­கை­யா­ளர்­கள், அலுவலக இட உரி­மை­யா­ளர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு கொடுக்­கப்­படும்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக பெரிய அள­வில் இயங்­கிய நிறு­வனங்­கள் நோடித்­துப்போன­போது பய­னீட்­டா­ளர்­கள் அதிக பணத்தை இழந்­த­னர். எடுத்­துக்­காட்­டாக, 2020ஆம் ஆண்டு 'எஸ்­டிஏ டிரா­வல்' நிறு­வ­னம் நொடித்­துப்­போ­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் முன்­னாள் ஊழி­யர்­க­ளுக்­கும் அது ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகையை வழங்­க­வேண்டி­யி­ருந்­தது.

"முன்­கூட்­டியே கட்­ட­ணம் செலுத்தி அதிக பணத்தை இழக்­கும் பய­னீட்­டா­ளர்­களைக் கொ துறை­களில் நடப்­பதை ஆராய்ந்து வர்த்­தக, தொழில் அமைச்சு அவற்­றில் முன்­கூட்­டியே கட்­ட­ணம் செலுத்­து­வ­தற்­கான பாது­காப்­பைக் கட்­டா­யப்­ப­டுத்­தும் என்ற நம்­பிக்­கை­யைக் கொண்­டுள்­ளேன்," என்று திரு யோங் கூறி­னார். இதன்­படி, நிறு­வ­னங்­கள் மூடப்­பட்­டால் பய­னீட்­டா­ளர்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­படா­மல் இருக்க எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்து அவர்­க­ளுக்­குக் கூடு­தல் விவ­ரங்­களை சம்­பந்­தப்­பட்ட துறை­கள் வழங்­கும்­படி வர்த்­தக, தொழில் அமைச்சு செய்­ய­லாம்.

அதிக புகார்­கள் வரும் துறை­களுக்­கென கூட்டு அங்­கீ­கார திட்­டங்­களை வரைய வர்த்­த­க சங்­கங்­கள் உள்­ளிட்­ட­வற்­று­டன் பய­னீட்­டா­ளர் சங்­கம் இணைந்து செயல்­ப­டு­வ­தா­கத் திரு யோங் தெரி­வித்­தார்.

உடற்­பி­டிப்பு சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள், புதுப்­பிப்­புப் பணி நிறு­வ­னங்­கள் உள்­ளிட்­ட­வை­ இந்த ஏற்­பாட்­டில் அடங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!