வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்விக்க முயற்சி

பண்­டி­கைக் காலத்­தில் பல­ரும் வீட்­டில் ஓய்வு எடுப்­போம், உற்­றார் உற­வி­ன­ரு­டன் மகிழ்ச்­சி­யாக கொண்­டா­டு­வோம். ஆனால் கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடங்­கிய காலம் முதல் குடும்­பத்­தைக் காண முடி­யா­ம­லும் விழாக் காலங்­களில் வேலையைப் பார்க்கவேண்­டிய சூழ­லி­லும் பல வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் உள்­ள­னர். அவர்­களை மனத்­தில் கொண்டு 'கிரு­‌ஷ்­ணாஸ் ஃப்ரி மீல்ஸ்' என்ற அற­நிறு­வன அமைப்பு சிறப்பு பரி­சுப் பைக­ளைத் தயா­ரித்து வழங்­கி­வ­ரு­கிறது.

இந்த அமைப்பு தின­மும் இல­வ­ச­மாக உணவு வழங்­கும் உண­வ­கத்தை நடத்­தி­வ­ரு­கிறது. தீபா­வ­ளிக்கு 1,220 பைகள், கிறஸ்­மஸ் பண்­டி­கைக்கு 1,580 பைகள் என்று வழங்­கிய கிரு­‌ஷ்­ணாஸ், புத்­தாண்டு தினமான இன்­றும் ஏறக்­கு­றைய 1,100 பைகளை வழங்­கும் என்று தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தது.

இப்­பை­களில் முகக்­க­வ­சம், கை சுத்­தி­க­ரிப்­பான், லட்டு, பழங்­கள் ஆகிய பொருள்­கள் இருக்­கும்.

"18 மாதங்­க­ளுக்­கும் மேலாக சொந்த நாட்­டுக்­குத் திரும்பி குடும்­பத்­தைப் பார்க்­க­மு­டி­யாத சூழ்­நி­லை­யில் பல வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உள்­ள­னர். கட்­டு­மா­னம், சுத்­தி­க­ரிப்பு போன்ற அத்­தி­யா­வ­சிய சேவைத் துறை­களில் பலர் பணி­யாற்­று­வ­தால் பண்­டிகை நாள்­க­ளி­லும் வேலை செய்­ய­வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ள­னர். அவர்­களை உற்­சா­கப்­படுத்­தும் வகை­யில் இந்த முயற்­சியை நடத்தி வரு­கி­றோம்," என்­றார் 'கிரு­‌ஷ்­ணாஸ் ஃப்ரி மீல்ஸ்' அமைப்­பின் துணை நிறு­வ­ன­ரான 52 வயது குமாரி லதா கோவிந்­த­சாமி.

வரும் சீனப் புத்­தாண்டுக்­கும் இதுபோன்ற சிறப்பு முயற்­சியை கிரு­‌ஷ்­ணாஸ் நடத்­தும் என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

எஸ். வெங்கடேஷ்வரன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!