கையில் கேமராவுடன் வனவிலங்கு விழிப்புணர்வு

இயற்­கை­யின் மீதும் அதில் உறை­யும் உயி­ரி­னங்­கள் மீதும் மக்­கள் மேலும் பரிவு காட்ட, தம்­மால் பங்­காற்ற முடி­கிறது என்­ப­தில் திரு ஜெய­பி­ர­காஷ் போஜன் மகிழ்ச்சி கொள்­கி­றார். சிங்­கப்­பூ­ரின் பல்­லு­யிர் சூழ­லைப் படம்­பி­டித்­துக் காட்­டும் படைப்பை அண்­மை­யில் முடித்­துள்ள திருப்­தி­யில் இவ்­வாறு கூறி­னார் திரு ஜெய­பி­ர­காஷ்.

இந்­தி­யா­வில் பிறந்த இவர், இயற்கை மற்­றும் வன­வி­லங்­கு­களைப் படம் பிடிப்­ப­து­டன் விளக்­கப்படங்­க­ளைத் தயா­ரித்­தும் உள்­ளார்.

தம் குடும்­பத்­தா­ரு­டன் பாசிர் ரிசில் வசிக்­கும் ஜெய­பி­ர­காஷ், வன­வி­லங்­கு­கள் மூலம் சிங்­கப்­பூ­ரின் அரிய அம்­சங்­க­ளுக்­குப் புது­மை­யான கண்­ணோட்­டத்தை வழங்க 'ஹேஜ்ட் புரொ­டக்­‌ஷன்ஸ்' எனும் உள்­ளூர் தயாரிப்பு நிறு­வ­னத்­தால் நிய­மிக்­கப்­பட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் மறைந்து கிடக்­கும் அற்­பு­தங்­க­ளைக் காட்­சிப்­படுத்­த­வும் சிங்கை நக­ரைப் பற்றி பிரம்­மாண்ட, உண்­மைக் கதை­களைச் சொல்­ல­வும் சிங்­கப்­பூர் பய­ணத்­துறை வாரி­யம் மேற்­கொண்ட முயற்சி இது.

திரு ஜெய­பி­ர­காஷ் 2017ஆம் ஆண்­டில் தலை­சி­றந்த புகைப்­ப­டக் கலை­ஞர் விரு­தைப் பெற்­றி­ருந்­தார்.

இவர் சிங்­கப்­பூரை 24 மாதங்­களாக வலம்­வந்து, படங்­க­ளை­யும் காணொ­ளி­க­ளை­யும் பதிவு செய்துள்­ளார். அவ­ரின் பதி­வு­களில் அரிய ஆந்­தை­வ­கை­கள், நீர்­நாய்­கள், கடல் கழு­கு­கள், கூரை மீதி­ருந்த புனு­குப்­பூ­னை­கள், மீன்­கொத்­திப் பற­வை­கள் போன்ற உயி­ரி­னங்­கள் இடம்­பெற்­றி­ருக்­கும்.

"இந்­தச் சிறிய தீவின் பல்­லு­யிர் சூழல் அற்­பு­த­மா­னது," என்­றார் 46 வயது ஜெய­பி­ர­காஷ். தமிழ்­நாட்­டைச் சேர்ந்த உத­க­மண்­ட­லத்­தைச் சேர்ந்த இவர், தம் மனைவி மற்­றும் மூன்று வயது மக­னு­டன் சிங்­கப்­பூ­ருக்கு 2016ல் வந்­தார்.

நான்கு ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் புகைப்­ப­டக் கலை­ஞ­ரா­கப் பணி­யாற்­றும் திரு ஜெய­பி­ர­காஷ், கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக காணொ­ளிக் கதை­க­ளைப் பதிவு செய்து வரு­கி­றார்.

பொழு­து­போக்­கா­கக் தொடங்­கி­யது, பின்­னா­ளில் முக்­கிய நோக்­க­முடைய புகைப்­பட, காணொ­ளிப் பதிவு நட­வ­டிக்­கை­யாக மாறி­யது.

"என் பதி­வு­கள் வழி இயற்கை, வன­வி­லங்கு போன்­ற­வை­க­ளின் மீது மக்­கள் காதல் கொள்ள நான் உத­வு­கி­றேன். போர்­னி­யோ­வின் பொழில் சூழல்­களில் ஏற்­படும் அழி­வைக் குறித்த விழிப்­பு­ணர்­வை­யும் என்­னால் புகைப்­ப­டக் கண்­காட்­சி­கள் மூலம் ஏற்­ப­டுத்த முடி­கிறது.

"மக்­கள் இயற்கை மீது காதல் கொள்ள வேண்­டும். உல­கில் அதி­க­ரித்­து­வ­ரும் வெப்­ப­நிலை, உய­ரும் கடல் மட்­டம், நெகி­ழி­யால் சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு போன்ற விவ­கா­ரங்­க­ளுக்­கி­டையே இயற்கை மீதும் அதில் வசிக்­கும் உயிர்­கள் மீதும் மக்­கள் மேலும் அக்­கறை கொள்­வ­தில் நான் பங்­காற்­று­வது முக்­கி­யம்," என்று தெரி­வித்­தார் திரு ஜெய­பி­ர­காஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!