கொரோனாவை ஒடுக்குவோம்; நீண்டகால சவால்களை வெல்வோம்

உலகில் 2019ல் தலைகாட்­டிய கொரோனா, கொவிட்-19 என்ற பெய­ரில் 2020ல் கோரத்­தாண்டவ மா­டி­யது. பிறகு 2021ல் டெல்டா என்ற வடி­வில் அது பேட்டம் போட்­டது. அந்தக் கிருமி 2022ஆம் ஆண்­டுக்­காக ஓமிக்­ரானை விட்­டுச் செல்­கிறது.

இப்­படி கடந்த இரண்டு ஆண்டு கால­மாக உலகை உலுக்கி வந்துள்ள­ தொற்­று­நோய் இன்னமும் நம்­மை­விட்டு அக­லாத நிலை­யில், தடுப்­பூசி ஒன்று­தான் கொவிட்-19 கிரு­மி­யின் பிடி­யில் இருந்து உல­கம் விடு­தலை பெறு­வ­தற்­கான ஒரே­ வழிகத் தெரி­கிறது.

மொத்­தத்­தில் கொரோனா கிருமி­யு­டன்­தான்­ உல­கம் காலம் தள்ள வேண்டி இருக்­கும் என்ற ஒரு நிலை படிப்­படிக நிலை­பெற்று வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரும் இதற்கு விதி­வி­லக்கு அல்ல. இருந்தா­லும் கடந்த இரண்டு ஆண்­டு­களில் எடுக்க வேண்­டிய முயற்­சி­களை எடுக்­க­வேண்­டிய நேரத்தில் விவேகமாக எடுத்து, கொவிட்-19 கார­ண­மாக ஏற்பட்டு உள்ள பொதுச் சுகா­தார சவால்­க­ளைத் திறம்­பட சமா­ளித்து, அதே­வே­ளை­யில், சமூகத்­திற்கும் பொரு­ளி­ய­லுக்­கும் தொற்று கார­ண­மாக ஏற்­டக்­கூடிய பாதிப்­பு­களைக் கூடு­மா­ன­வரை சிங்கப்­பூர் குறைத்­துக்கொண்­டுள்­ளது.

தடுப்­பூசி என்ற ஆயு­தத்தின் துணையுடன் பாது­காப்பு அரணைச் செம்மைகப் வலுப்ப­டுத்திக் கொண்டதும் மக்­கள் பொறு­ப்பு­டன் நடந்­து­கொண்­ட­தும் இதற்­கான மிக முக்­கி­யமான கார­ணங்­கள்.

வெகு நேர்த்தின தேசிய தடுப்­பூசி இயக்­கம் கார­ண­மாக மக்­களில் ஆக அதி­கம் பேர் தடுப்­பூசி போட்­டுக்கொண்­டுள்ள நாடு­களில் ஒன்­றாக சிங்கப்­பூர் இருக்­கிறது.

நமது நாடு, உல­கப் பொரு­ளி­யலைப் பெரி­தும் சார்ந்து இருக்­கும் ஒரு நாடு. எப்­போ­துமே தொலை நோக்­குக் கண்ணோட்டத்­து­டன் சவால்­களை எதிர்­நோக்கி உட­னுக்­கு­டன் உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து வரும் விவே­க­மிக்க நாடு சிங்கப்பூர்.

பொருளியல் வளர்ச்சி, புதிய வேலை­கள், செல்வச்­செ­ழிப்பு போன்ற சவால்­கள் அதற்­கு எப்­போ­துமே உண்டு. இருந்­தா­லும் தொற்று கார­ண­மாக உலகமே இப்­போது நிலை­குத்­திப் போயி­ருக்­கும் ஒரு நேரத்­தில், கொரா­னாவை ஒடுக்­கு­வ­தில் மட்டு­மின்றி அந்­தச் சவால்­கனை நோக்­கி நாடு தன் ஒரு­மித்த கவ­னத்­தைத் திருப்­ப­வேண்­டிய அவ­சி­யம் இப்­போது முன்­பை­விட அதி­க­மாகி இருக்­கிறது.

உல­கத்­து­டன் எப்போ­துமே தன்னை இணைத்­துக் கொண்­டுள்ள நாடு என்­ப­தால் உலக நில­வரங்­கள், வட்­டார நில­வ­ரங்­கள் சிங்­கப்­பூருக்கு மிக முக்­கி­ய­மா­னவை. உல­க­மும் வட்­டா­ர­மும் சீராக இருக்கவேண்­டியது அதற்குத் தேவை.

வல்­ல­ர­சு­க­ளான அமெ­ரிக்­காவுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் நல்ல உறவு நிலவ வேண்­டும் என்று எப்­போ­தும் சிங்கப்­பூர் நாடு­வ­தற்கு இதுவே காரணம்.

பிர­த­மர் லீ சியன் லூங், இவை எல்­லா­வற்­றை­யும் தனது புத்­தாண்டுச் செய்­தி­யில் விளக்கி வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கி­றார். கொரோனாவால் ஏற்­பட்டுள்ள பாதிப்­பு­களைச் சமா­ளித்து மீண்­டு­வ­ரு­வதில் இடை­வி­டாது ஒரு­மி­த்த கவ­னம் இடம்­பெ­ற­வேண்­டும். அது மட்­டும் போதாது. பரந்த அள­விலான உல­கக் கண்­ணோட்­டத்­து­டன் செயல்­பட்டு புத்­தாண்­டில் வளர்ச்சி, வேலை, செல்­வம் ஆகி­ய­வற்­றைப் பெருக்­க­வேண்­டும். இந்­தச் சவால்­க­ளைத் திறம்­பட சமா­ளித்து வெற்­றி­பெற வேண்­டும் என்று பிர­த­மர் தனது செய்­தி­யில் வலி­யு­றுத்தியிருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ருக்கு 2021ஐவிட 2022 சாத­கமா­ன­தாக இருக்­கிறது. ஆகைல் நன்­னம்­பிக்­கைக்கு அதிக மான கார­ணங்­கள் தெரி­கின்­றன. கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யு­டன், கொரோனா பாதிப்­பைக் குறைத்­துக்கொள்­ளும் வகை­யில் வலு­வான அரணை பலப்­ப­டுத்­திக் கொண்டு இருப்­பது நமக்கு மிக முக்­கி­ய­மான அனு­கூ­ல­மாக இருக்­கிறது.

இருந்­தா­லும் ஓமிக்­ரான் என்ற அதி­வே­க­மா­கப் பர­வக்­கூ­டிய தொற்று இப்­போது தலைதூக்கி வரு­வ­தால் கிருமி பர­வு­வ­தைக் தடுப்­ப­தற்­கான நடவடிக்கை­களில் தொய்வு ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­பது மிக முக்­கி­ய­மா­னது. இதில் ஒவ்­வொ­ரு­வ­ரும் தனது கட­மையை, பொறுப்பை உணர்ந்து தொடர்ந்து நடந்து ­கொள்­ள­வேண்­டும்.

இங்கு மிக முக்­கி­ய­மான ஒன்­றைக் குறிப்­பிட வேண்­டும். கொவிட்-19 கிருமி அவ்­வ­ளவு மோச­மானதல்ல, அதை ஒடுக்க முகக்­க­வ­சம் தேவை­யில்லை, தடுப்­பூசி கட்­டா­ய­மா­ன­தல்ல என்ற ஒரு மனப்­போக்கு உல­கின் சில பகு­தி­களில் தலை எடுக்­கிறது. முகக்­க­வ­சம் என்­பது தேவை­யில்­லாத சங்­க­டம் என்று சிலர் குரல் எழுப்பி அதை நிரா­கரிக்­கி­றார்­கள்.

இத்­த­கைய மக்­கள் தங்­க­ளுக்­கும் தங்­கள் வீட்டிற்­கும் நாட்­டிற்­கும் சமூ­கத்­திற்­கும் மறு­ப­டி­யும் பெரிய அள­வில் பாதிப்பை ஏற்­ப­டுத்த வழி­கோ­லு­கி­றார்­கள் என்­பதை நாம் மறந்­து­வி­டக்­கூ­டாது. நல்ல வேளை க, இங்கு அத்­த­கைய ஒரு சிந்தனை ஏற்­ப­ட­வில்லை. முகக்­க­வ­சம் தேவை. சமூக இடை­வெளி அவ­சி­யம். தடுப்­பூசி மிக முக்கியம் என்ற எண்­ணம் இங்கு பெரு­ம்பா­லான மக்­க­ளி­டம் நில­வு­கிறது. இருந்­தா­லும்­கூட இதில் நாம் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருந்­து­கொள்­ள­வேண்­டும். வெளியே நிலவும் அத்­த­கைய எண்­ணம் இங்கு இறக்­கு­மதிகாமல் தடுத்து வர­வேண்­டும்.

கொரோனா கிருமி உல­கம் இது­வரை கண்டிராத பொல்­லாத கிருமி என்­ப­தால் கொஞ்­சம் அலட்­சியம் காட்­டி­னா­லும் இது­வரை நாம் பட்ட சிர­மங்­கள், திகங்­கள் எல்­லாம் ஒன்­று­மில்­லா­மல் போய்­வி­டும்.

கொரானா ஒரு­நாள் எப்­ப­டி­யும் ஒடுங்­கும். இருந்­தா­லும் உலகை விட்டு ஒழிமல் சளிக்­காய்ச்­சல் போன்ற தொற்­று­நோ­யைப் போல் அப்­போ­தைக்கு அப்­போது அது தலை­காட்­டும் என்ற கணிப்­பு­தான் இப்­போது பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­படும் ஒன்­றாக இருக்­கிறது.

இத்த­கைய ஒரு நிலை­யில், சிங்­கப்­பூர் கொரோனா வுக்கு எதி­ரான தீவி­ர­மான முயற்­சி­களைக் கைவிடக் கூடாது. ­அதோடு, தொற்­றுக்­குப் பிந்­தைய காலத்தைக் கருத்­தில்கொண்டு பொரு­ளி­யல் உரு­மாற்­றத்­திற்கான முயற்சி­க­ளை அது மும்­மு­ர­மா­கத் தொடர வேண்­டும். நிறு­வ­னங்­கள் காலத்­திற்கு ஏற்ப மாறிக்­கொள்ள, ஊழி­யர்­கள் புதிய பொரு­ளி­ய­லுக்கு ஏற்ற தேர்ச்­சி ­க­ளைத் தொடர்ந்து கற்­றுக்­கொள்ள உத­வி­கள் கிடைக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் மீட்சி உறுதிக இருந்து வரு­கிறது. உலக வளர்ச்­சி­யு­டன் நம் பொருளியல் வளர்ச்­சி­யும் தொட­ரும் என்­ப­தில் இப்­போ­தைக்கு ஐய­மில்லை.

இவ்வேளையில், கொரோ­னா­வு­டன் வாழப்­ப­ழ­கிக் கொண்டு, அதே­வே­ளை­யில், நம்மு­டைய நீண்­ட­கால சமூக, பொரு­ளி­யல் சவால்­க­ளைத் திறம்­பட சமா­ளிப்­ப­தில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­து­வோம்.

இதைச் செவ்­வனே செய்து முடிப்­பதே நமது புத்­தாண்டு உறுதிக இருக்­கட்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!