புத்தாண்டில் கார் மோதி மூன்று பாதசாரிகள் காயம்

புத்தாண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பாதசாரிகள் காயம் அடைந்தனர். அம்மூவரும் உடனடியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது அவர்கள் மீது கருப்பு நிற 'மசராட்டி' ரக கார் மோதியதாக நம்பப்படுகிறது. கிரேஞ்ச் ரோடு, ஆர்ச்சர்ட் ரோடு சந்திப்பில் இரவு 9.35 மணியளவில் நிகழ்ந்த விபத்து குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சாலை நடுவில் இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விழுந்து கிடந்ததாக அவ்வழியாகச் சென்ற மாணவர் யாங் யூஸிவான், 22, பேட்டியொன்றில் கூறியிருந்தார். அசைவற்றுக் கிடந்த அவரை குடிமைத் தற்காப்புப் படையினர் தூக்குப் படுக்கையில் வைத்து ஆம்புலன்சுக்கு எடுத்துச் சென்றனர். 'மசராட்டி' காரை ஓட்டியவருக்கு முப்பது வயது இருக்கும் என்றும் அவருடன் ஒரு பெண்ணும் ஒரு பையனும் இருந்தனர் என்றும் யாங் சொன்னார். இந்த விபத்தால் சாலையின் இரண்டு தடங்கள் அரை மணி நேரத்துக்கு மேல் மூடப்பட்டன. படம்: சாவ்பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!