செய்திக்கொத்து

நிதி நெருக்கடியில் சிக்கிய நோயாளிகளுக்கு நிதியுதவி

சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வ­ம­னை­கள், நிதிப் பிரச்­சி­னை­யில் சிக்கியுள்ள சில நோயா­ளி­க­ளுக்கு ரத்தச் சுத்­தி­க­ரிப்பு, ஆம்­பு­லன்ஸ் சேவை போன்ற இடைக்­கால சேவை­க­ளுக்கு அறப்­பணி நிதி மூலம் உதவி வழங்கியுள்ளன.

மெடி­ஃபண்ட் கீழ் வராத சில மருத்­துவ சேவை­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கப்­ப­டுவதாக சிங்­கப்­பூ­ரில் உள்ள சுகா­தா­ரப் பரா­ம­ரிப்புக் குழு­மங்­களில் ஒன்றான தேசிய பல்­க­லைக்கழக மருத்­து­வ­ம­னையை உள்­ள­டக்­கிய தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தா­ரக் குழுமம் (என்­யு­எச்­எஸ்) தெரி­வித்­தது.

2020 டிசம்­பர் முதல் 2021 நவம்­பர் வரை என்­யு­எச்­எஸ் நிதி மூலம் 1,060க்கும் மேற்­பட்­டோர் பலன் அடைந்­துள்­ள­னர். இதன் மொத்த மதிப்பு 3.3 வெள்ளிக்கு மேலா­கும்.

சக்­கர நாற்­காலி, ரத்தச் சுத்­தி­க­ரிப்பு ஆகி­ய­வற்­றுக்­கும் மருத்­துவமனையிலி­ருந்து வீடு திரும்­பியதும் வீட்டைச் சுத்­தப்­ப­டு­வது போன்ற சேவை­ களுக்­கும் நிதி­யு­தவி வழங்­கப்­பட்­ட­தாக என்­யு­எச்­எஸ் குறிப்­பிட்­டது.

கேகே மகளிர், சிறார் நல மருத்­து­வ­ம­னை­யும் தன்­னு­டைய அறப்­பணி நிதி மூலம் ஆண்­டுக்கு 400க்கும் மேற்­பட்ட நோயா­ளி­க­ளுக்கு ஒரு மில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள உத­வி­களை செய்து வருகிறது.

1,500 வெள்ளி வரை ஊதியம்

பெறும் சில பணிப்பெண்கள்

சில பணிப்பெண்களுக்கு முதலாளி வீட்டில் வசிக்காமல் வெளியே தங்குவதற்கு 1,500 வெள்ளி வரை வழங்கப்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதவள அமைச்சின் அனுமதி பெறாமல் பணிப்பெண்களை இப்படி தங்க வைப்பது சட்ட விரோதமாகும்.

ஆனால் சில பணிப்பெண்கள் இதனை விரும்புவதால் இதேபோன்ற ஏற்பாட்டைச் செய்து தரும் முதலாளிகளை நாடிச் செல்கின்றனர். கடந்த ஆண்டு சுமார் ஐம்பது பணிப்பெண்கள் அதற்கு முன்வரும் முதலாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

"வெளியே தங்குவது வசதியாகவும் சுதந்திரமாகவும் உள்ளது. என்னுடைய முதலாளிகளும் இந்த ஏற்பாட்டை விரும்புகின்றனர்," என்று பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி எனும் பணிப்பெண் ஒருவர் உள்ளூர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

வெளிநாட்டு ஊழியர் வேலை வாய்ப்பு (ஒர்க் பர்மிட்) விதிமுறைகளின் கீழ் ஒர்க் பர்மிட்டில் குறிப்பிட்ட முகவரியில் மட்டுமே தங்கி, வேலை செய்ய முடியும். வசிப்பிடம் வேறு இடமாக இருந்தால் வேலை அனுமதிச் சீட்டின் கட்டுப்பாட்டு அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வ அனுமதியைப் பெற வேண்டும்.

இரண்டு வாரங்களில் இல்லாத

அளவுக்கு தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு தொற்று அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மதியம் வரை 456 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 260, வெளிநாட்டு தொற்றுச் சம்பவங்களாகும்.

மேலும் ஒருவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். இதனால் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 829க்கு அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் அண்மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை பதிவான 456 தொற்றுச் சம்வங்கள், டிசம்பர் 15க்குப் பிறகு இரண்டு வாரங்களில் இல்லாத அதிக எண்ணிக்கையாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!