429 புதிய தொற்றுச் சம்பவங்கள்

சிங்கப்பூரில் ஞாயிறு மதியம் வரை 429 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 297, வெளி நாட்டில் இருந்து வந்தவர்களால் ஏற்பட்ட தொற்றுச் சம்பவமாகும். யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் கொவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 829ஆகவே உள்ளது என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்ட 456 பேருடன் ஒப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை தொற்று எண்ணிக்கை குறைந்து இருந்தது. ஞாயிறு அன்று புதிதாக பதிவான தொற்றுச்சம்பவங்களில் 128 சமூக அளவில் பரவிய தாகும். தங்குவிடுதிகளில் நான்கு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ஞாயிறு அன்று 155 பேர் புதிதாக உருமாறிய ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்டனர் என்றும் சுகாதார அமைச்சு தனது இணையப்பக்கத்தில் விவரம் வெளியிட்டிருந்தது.

அதே நாளில் வாராந்திர தொற்று விகிதம் 0.92ஆக இருந்தது. சனிக்கிழமை அன்று இந்த விகிதம் 0.85ஆக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!