மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடமாட்டமும் பரபரப்பும் அதிகரிப்பு

கொவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பணியிடக் கட்டுப்பாடுகள் திங்கட்கிழமையில் (ஜனவரி 3) இருந்து தளர்த்தப்பட்டன.

இதனையடுத்து, ஊழியர்கள் பணியிடங்களுக்குத் திரும்பியதால் மத்திய வர்த்தக வட்டாரப் பகுதியில் உள்ள உணவகங்களில் நண்பகல் நேரத்தில் அதிகமானோரைக் காண முடிந்தது.

“கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் கூட்டம் குறைவுதான். ஆனாலும், கடந்த ஆண்டில் நண்பகல் நேரத்தில் காலியாக இருந்ததைக் காட்டிலும் இது மேம்பட்ட நிலைதான்,” என்றார் ‘எலியட் அண்ட் கோ’ மக்கள் தொடர்பு முகவையின் நிறுவனர் ஜெரமி ஃபூ.

செசில் ஸ்திரீட்டில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் பத்து ஊழியர்கள் திங்கட்கிழமை அலுவலகம் திரும்பினர். பொதுப் போக்குவரத்தில் வழக்கத்தைவிட அதிக கூட்டம் காணப்பட்டதாக தம் ஊழியர்கள் கூறியதாக திரு ஃபூ சொன்னார்.

இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து, வீட்டில் இருந்தபடி வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் பாதிப் பேர் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு, அவர்கள் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது அல்லது கடந்த 180 நாள்களுக்குள் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டிருக்க வேண்டியது அவசியம்.

தடுப்பூசி போடாதோரைப் பொறுத்தமட்டில், நிகழ்ச்சிக்கு முந்திய கொரோனா பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்றிருப்பினும் இம்மாதம் 14ஆம் தேதிவரை மட்டுமே அவர்கள் பணியிடத்திற்குத் திரும்பலாம். 15ஆம் தேதியில் இருந்து பணியிடத்திற்குச் செல்ல முடியாது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து வீட்டில் இருந்தபடி வேலை செய்வது வழக்கமான நடைமுறையாக இருந்தது.

அலுவலகத்திற்குத் திரும்பிய தம் ஊழியர்கள் அனைவரும், சக ஊழியர்களைக் காண முடிந்ததில் மகிழ்ச்சி அடைந்ததாக திரு ஃபூ குறிப்பிட்டார்.

இருப்பினும், பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியும் அலுவலகத்திற்கு வந்தும் வேலை செய்யும் கலப்புப் பணிமுறையை விரும்புவதால் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்குத் திரும்புவர் என்று தாம் நம்பவில்லை என்றும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!