146 மாணவர்களுக்கு $51,650 கல்வி நிதி

டெப்போ ரோட்­டில் உள்ள ஸ்ரீ ருத்ர காளி­யம்­மன் ஆல­யம் இம்­மா­தம் 2ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று 146 மாண­வர்­க­ளுக்கு கிட்­டத்­தட்ட $51,650 மதிப்­பி­லான கல்வி உதவி நிதி, உப­கா­ரச் சம்­பள விருது­களை வழங்­கி­யது.

50 மாண­வர்­கள் மட்­டும் நேரில் வந்து நிகழ்ச்­சி­யில் பங்­கு பெற்­ற­னர்.

மற்ற மாண­வர்­க­ளுக்கு அஞ்­சல் மூலம் கல்வி நிதி உதவி அனுப்­பப்பட்­டது.

ஸ்ரீ ருத்ர காளி­யம்­மன் ஆலய ஏற்­பாட்­டில், இவ்­வி­ருது நிகழ்ச்சி 1996ஆம் ஆண்­டி­லி­ருந்து நடை­பெற்று வரு­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாண்டு சிறப்பு விருந்­தி­ன­ராக பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் நிதி மற்­றும் தேசிய வளர்ச்சி இரண்­டாம் அமைச்­சருமான இந்தி­ராணி ராஜா கலந்துகொண்­டார்.

சவால்­களை எதிர்­நோக்­கும் அனைத்து இன மாண­வர்­க­ளுக்­கும் பார­பட்­ச­மின்றி உத­வும் நோக்­கில் ஆல­யம் இம்­மு­யற்­சியை மேற்­கொண்­டுள்­ளது என்று பாராட்­டிய குமாரி இந்­தி­ராணி, உத­வித் தொகை பெறும் மாண­வர்­கள் இதை அவர்­க­ளின் முன்­னேற்­றத்­திற்­காக பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் குறிப்­பிட்­டார்.

ஸ்ரீ ருத்ர காளி­யம்­மன் ஆல­யத்தின் தலை­வர் திரு வீர. அழ­கப்­பன் பேசு­கை­யில் "மாண­வர்­கள் நம்­பிக்­கை­யு­டன் தங்­க­ளின் கனவு­களை நன­வாக்க இது­போன்ற சமூக ஆத­ரவு முயற்­சி­கள் இன்­றி­ ய­மை­யா­தவை. குறை­வான வரு­மா­னம் பெறும் குடும்­பத்­தைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு இந்த விரு­து­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன," என்று தெரிவித் தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!