விரைவில் பிடோக் அக்கம்பக்க காவல்நிலையம் உதயமாகிறது

பிடோக் வடக்கு, பிடோக் தெற்கு அக்­கம்­பக்கக் காவல் நிலை­யங்­கள் (என்­பிசி) இந்த மாதம் 31ஆம் தேதி ஒன்­றாக இணைக்­கப்­படும்.

இரண்­டும் சேர்ந்து பிடோக் அக்­கம்­பக்கக் காவல் நிலை­யம் என்ற புதிய நிலை­யம் உரு­வா­கும்.

இப்­போது இத்­த­கைய மொத்­தம் 35 அக்­கம்­பக்­கக் காவல் நிலை­யங்­கள் செயல்­ப­டு­கின்­றன.

மாறிவரும் பாது­காப்­புச் சவால்­கள், சமூ­கத் தேவை­களுக்கு ஏற்ப அக்­கம்­பக்­கக் காவல் நிலை­யங்­களை செம்­மை­யாக மாற்றி அமைப்­ப­தற்கு முயற் சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

சிறி­தான, அமை­விட ரீதி­யில் தொடர்­புடைய இத்­த­கைய அக்­கம்­பக்கக் காவல் நிலையங்­களை இணைத்து, ஆற்­றல் வளங்­களை ஒன்­று­தி­ரட்டி அதன் மூலம் மக்­க­ளுக்கு இன்­னும் சிறந்த முறை­யில் சேவை வழங்­கும் நோக்­கத்­து­டன் இந்த இணைப்­புத் திட்­டம் நடப்புக்கு வந்­துள்­ளது.

இதை­யொட்டி புதிய பிடோக் அக்­கம்­பக்கக் காவல் நிலை­யம் உரு­வா­கிறது என்று காவல்­துறை அறிக்கை தெரி­வித்­தது.

இணைப்­புக்­குப் பிற­கும் சேவைத் தர­மும் உத­விக்கு விடுக்­கப்­படும் அழைப்­பு­க­ளுக்கு அதி­கா­ரி­கள் செவி­சாய்த்து செயல்­படும் ஆற்­ற­லும் பாதிக்­கப்­ப­டாது என்று பொது­மக்­க­ளுக்­குக் காவல் துறை உறுதி தெரி­வித்­துள்­ளது.

அக்­கம்­பக்கக் காவல் நிலைய இணைப்­புத் திட்­டத்­தின்­கீழ் முதன்­முதலாக உரு­வா­கும் நிலை­யம் பிடோக் அக்­கம்­பக்கக் காவல் நிலை­ய­மா­கும்.

இதர மூன்று இணைப்­பு­கள் பற்றி இப்­போது பரி­சீ­லிக்­கப்­படுகிறது.

பிடோக் அக்­கம்­பக்கக் காவல் நிலை­யம், இப்­போ­தைய பிடோக் வடக்கு நிலை­யம் செயல்­படு­கின்ற எண் 30 பிடோக் நார்த் ரோடு முக­வ­ரி­யில் அமை­ந்திருக்கும்.

எண் 20 சாய் சீ டிரைவ் முக­வரி­யில் அமைந்­துள்ள பிடோக் தெற்கு நிலை­யம், பிடோக் தெற்கு அக்­கம்பக்­கக் காவல்­சா­வ­டி­யாக (என்­பிபி) மாற்­றப்­படும்.

புதிய பிடோக் அக்­கம்­பக்கக் காவல் நிலை­ய­மும் பிடோக் தெற்கு அக்­கம்­பக்கக் காவல்சாவடி­யும் தொடர்ந்து மக்­க­ளுக்கு 24 மணி நேர முகப்­புப் சேவை­களை வழங்­கும்.

பிடோக் வடக்கு, பிடோக் தெற்கு அக்­கம்­பக்கக் காவல் நிலை­யங்­கள் இணைக்­கப்­ப­டு­வதன் தொடர்­பில் மேல் விவ­ரம் பெற விரும்­பு­வோர் 1800-244-9999 எண் மூலம் தொடர்புகொள்­ள­லாம் என்று காவ­ல்துறை தெரி­வித்­து உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!