கொவிட்-19 நோயாளிகளை தீர்மானிப்பதில் பெரும் பங்கு

கொவிட்-19 நோயா­ளி­களில் யாருக்­கெல்­லாம் அணுக்க மருத்­து­வக் கவ­னிப்­புத் தேவைப்­படும் என்பதையும் வீட்­டில் பாது­காப்­பான முறை­யில் குண­ம­டை­யத் தகு­தி­யுள்­ளோர் யார் என்­ப­தை­யும் முடிவு செய்­வ­தில் இன்று முதல் பொது மருத்­து­வர்­கள் பெரும் பங்கு வகிப்­பார்­கள்.

சொந்­தப் பொறுப்­பும் சுய பரா­

ம­ரிப்­பும் என்­னும் நிலையை நோக்­கிய விரி­வான மாற்­றத்­தின் ஒரு பகு­தி­யாக இவை இடம்­பெ­று­வ­தாக சுகா­தார அமைச்சு நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

அதி­கம் பர­வக்­கூ­டிய, குறைந்த ஆபத்­துள்ள ஓமிக்­ரான் வகை தொற்­றால் புதி­தா­கப் பாதிக்­கப்­

ப­டு­வோரின் எண்ணிக்கை அதி­க­ரித்து வரும் நிலை­யில் இந்த மாற்­றங்­கள் கொண்டு வரப்­ப­டு­கின்­றன.

குறைந்த அபா­ய­முள்­ள­தா­க­வும் இலே­சான அறி­குறி இருப்­ப­தா­க­வும் கரு­தப்­ப­டு­வோர் தங்­க­ளது வீட்­டி­லேயே 72 மணி நேரத்­திற்கு தனி­மைப்­ப­டுத்­திக்கொள்­ளு­மாறு கேட்­டுக்கொள்­ளப்­ப­டு­வர்.

இந்­தக் காலக்­கெடு முடி­வில் மேற்­கொள்­ளப்­படும் பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என தெரிய வந்­தால் அவர்­கள் தங்­க­ளது வீட்­டை­விட்டு வெளி­யேற அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

மேலும் அவர்­க­ளுக்கு ஐந்து நாள் மருத்­துவ விடுப்பு அளிக்­கப்­படும். இதன் மூலம், நோய் அறி­குறியிலிருந்து விடுபட அவர்­

க­ளுக்­குப் போது­மான கால அவ­கா­சம் கிடைக்­கும்.

அறி­குறி தொடர்ந்­தால் அவர்­கள் மீண்­டும் மருத்­து­வ­ரைக் காண வேண்­டும். அவர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோ­ருக்கு சுகா­தார அபாய எச்­ச­ரிக்கை அனுப்­பப்­படும். அவர்­கள் அனை­வ­ரும் தங்­க­ளது உடல்­நி­லையை ஏழு நாள்­க­ளுக்­குக் கண்­கா­ணிப்­பது அவ­சி­யம். அத்­து­டன் முதல் நாளும் ஏழாம் நாளும் ஆண்­டி­ஜென் விரை­வுப் பரி­சோ­த­னையை அவர்­கள் செய்­து­கொள்ள வேண்­டும்.

வெளி­யில் செல்­லும்­போ­தும் அவர்­கள் இந்­தப் பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும்.

72 மணி­நேர தனி­மைப்­ப­டுத்து தல் மூலம் குண­ம­டை­யும் முறை யின்­கீழ் அதி­க­மா­னோர் பங்­கேற் கும் வித­மாக மேலும் சில மாற்றங்­ களை வரும் வாரங்­களில் செய்ய இருப்­ப­தாக அமைச்சு கூறி­யது.

இன்று முதல் நோயின் தன்மையை மதிப்பிடுவதில் பொது மருத்துவர்கள் பங்கேற்பர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!