தடுப்பூசிக்கு எதிரான குழு பற்றி காவல்துறையிடம் புகார்

'ஹீலிங் த டிவைட்' என்­னும் தடுப்­பூ­சிக்கு எதி­ரான குழு பற்றி சுகா­தார அமைச்சு காவல்­து­றை­யில் புகார் செய்­துள்­ளது.

குழந்­தை­க­ளுக்­கான தடுப்­பூசி நிலை­யங்­க­ளின் பணி­களை தடுத்து நிறுத்த வேண்­டும் என பெற்­றோர்­களை இக்­கு­ழு­வின் நிறு­வ­னர் வலி­யு­றுத்­தி­ய­தைத் தொடர்ந்து அமைச்சு இந்­ந­ட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யது.

குழு­வின் நிறு­வ­னர் திரு­வாட்டி ஐரிஸ் கோ என்­ப­தை­யும் குழு­வின் டெலி­கி­ராம் தளத்­தில் டிசம்­பர் 27ஆம் தேதி பெற்­றோ­ருக்கு அறி­வு­றுத்­தும் தக­வல் பதி­வேற்­றப்­ப­பட்­ட­தை­யும் தான் அறிந்­தி­ருப்­ப­தாக அமைச்சு நேற்று தனது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

குழந்­தை­க­ளுக்­கான தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்­குச் சென்று 'அங்­கி­ருக்­கும் மருத்­து­வப் பணி­யா­ளர்­களை கேள்­வி­க­ளால் துளைத்­தெ­டுக்க வேண்­டும்' என்று அந்­தத் தக­வ­லில் அவர் கூறி­ய­தாக அமைச்சு தெரி­வித்­தது.

"இது­போன்ற நட­வ­டிக்கை குழந்தை­க­ளுக்­கான தடுப்­பூசி நிலை­யங்­களில் நடை­பெ­றும் பணி­க­ளுக்கு இடை­யூ­றாக அமை­யும்.

"அத்துடன், அங்­கி­ருக்­கும் மருத்­து­வப் பணி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான துன்­பு­றுத்­த­லைத் தூண்­டும் வித­மா­க­வும் இது விளங்­கு­கிறது. கடு­மை­யான விவ­கா­ரம் என்­ப­தால் இது­கு­றித்து காவல்­து­றை­யில் புகார் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது," என்­றது அமைச்சு.

கொவிட்-19 தொடர்­பான தக­வல்­க­ளை­யும் தடுப்­பூசி பற்­றி­யும் தவ­றான கருத்­து­களை ஏற்­கெ­னவே பரப்­பிய இக்­கு­ழு­வின் தவ­றான வழி­காட்­டு­தலை பொது­மக்­கள் யாரும் பின்­பற்ற வேண்டாம் என்று அமைச்சு கேட்­டுக்­கொண்டு உள்­ளது.

விரி­வான பரி­சோ­த­னை­க­ளுக்­குப் பின்­னர், ஃபைசர்-பயோ­என்­டெக்/கொமிர்நாட்டி தடுப்­பூசி, 5 வயது முதல் 11 வயது வரை­யி­லான குழந்­தை­க­ளுக்கு ஏற்­றது என்று உலக அமைப்­பு­களும் சிங்­கப்­பூ­ரின் சுகா­தார அறி­வி­யல் ஆணை­ய­மும் ஒப்­பு­தல் வழங்கி இருப்­ப­தாக அமைச்சு தெரி­வித்துள்­ளது.

தொடக்­க­நிலை 4 முதல் 6 வரை­யி­லான மாண­வர்­க­ளுக்கு டிசம்­பர் 27ஆம் தேதி முதல் தடுப்­பூசி போடப்­பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!