அதிகரிக்கும் தொற்று: நிலைமையைச் சமாளிக்க மருத்துவமனைகள் தயார்நிலை

அதி­க­ரிக்­கும் கொவிட்-19 நோயா­ளி­க­ளைச் சமா­ளிக்­கும் அள­வுக்கு சிங்கப்பூரில் மருத்­து­வ­ம­னை­கள் தயார்­நி­லை­யில் உள்­ள­தா­க­வும் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட 7 விழுக்காடு நோயா­ளி­கள் அனுமதிக்கப்பட்டு உள்­ள­தா­க­வும் சிங்­கப்­பூ­ரின் மருத்­துவ சேவைத்­துறை இயக்­கு­நர் கென்­னத் மாக் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று நடைபெற்ற கொவிட்-19க்கான அமைச்­சு­கள் நிலை பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பங்­கேற்­றுப் பேசிய அவர், பொது மருத்­து­வ­ம­னை­களில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­படும் பெரி­யோர், குழந்­தை­க­ளுக்­காக 1,200க்கும் மேற்­பட்ட படுக்­கை­கள் தற்­போது தயார்­நி­லை­யில் இருப்­ப­தா­கச் சொன்­னார்.

மொத்த படுக்­கை­களில் 28 விழுக்­காட்டை தற்­போது பெரி­யோர் பயன்­ப­டுத்தி வரு­வ­தா­க­வும் எல்லா வகை­யான தீவிர சிகிச்சை நோயா­ளி­களும் பொது மருத்­து­வ­மனை தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு

­ம­திக்­கப்­பட்டு இருக்­கும் விகி­தம் 44 விழுக்­காட்­டுக்­கும் குறைவு என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அவ­ச­ர­மற்ற நிலை­களில் இருந்த நோயா­ளி­க­ளின் பொது­வான சிகிச்­சை­யும் அறுவை சிகிச்­சை­யும் கடந்த மூன்று மாதங்­கள் தள்­ளிப்­போ­டப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவர்­க­ளைக் கவ­னிக்­கும் பணி தற்போது தொடங்கி இருப்­ப­தா­க­வும் பேரா­சி­ரி­யர் மாக் கூறி­னார்.

இதற்கு முன்­னர் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட சில படுக்­கை­களை கொவிட்-19 அல்­லாத நோயா­ளி­கள் பயன்­ப­டுத்­தும் வித­மாக மாற்­றி­ய­மைத்­துக் ெகாள்ள மருத்­து­வ­ம­னை­கள் அனு­ ம­திக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும், புதிய வகை ஓமிக்­ரான் தொற்­றால் நிலைமை எப்­போது வேண்டு­மா­னா­லும் மாற­லாம் என்­ப­தால் தனி­மை உத்தரவுக்கான படுக்­கை­க­ளை­யும் தீவிர சிகிச்­சைப் பிரிவில் உள்ள படுக்­கை­க­ளை­யும் அள­வுக்கு அதி­க­மாக அவ்­வாறு மாற்­றி­வி­டா­த­வாறு கவ­ன­மு­டன் செயல்படுமாறு அதி­கா­ரி­களிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!