நவம்பர் 12க்குப் பிறகு முதல்முறையாக உயர்ந்த வாராந்திர தொற்று விகிதம்

சிங்­கப்­பூ­ரின் வாராந்­திர கிரு­மிப் பர­வல் விகி­தம் நவம்­பர் 12ஆம் தேதிக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக 1க்கு மேல் அதி­க­ரித்­துள்­ள­தாக சுகா­தார அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. ஒரு வாரத்­தில் சமூக அள­வில் பர­விய மொத்த கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை அதற்கு முந்­திய வாரத்­தின் எண்­ணிக்­கை­யோடு ஒப்­பிட்டு கணக்­கி­டப்­ப­டு­கிறது. கொவிட்-19 தணிப்பு நட­வ­டிக்­கை­களை அள­வீடு செய்­வ­தற்கு இந்­தக் கணக்­கீடு உத­வு­கிறது.

செவ்­வாய்க்­கி­ழமை (நேற்று முன்­தி­னம்) இந்த வாராந்­திர தொற்­றுப் பர­வல் விகி­தம் 1.09 ஆகப் பதி­வாகி இருந்­தது. அன்­றைய தினம் 842 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் 502 பேர் வெளி

­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். அன்­றா­டம் பதி­வா­கும் தொற்­று­ க­ளின் எண்­ணிக்கை டிசம்­பர் 30 முதல் அதி­க­ரித்து வரு­கிறது.

வாராந்­திர தொற்று விகி­தம் 1க்கு மேல் இருந்­தால் உள்­ளூ­ரில் பதி­வா­கும் வாராந்­திர கொவிட்-19 சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தாக அர்த்­தம்.

இதற்கு முன்­னர் டிசம்­பர் 24ஆம் தேதி இந்த விகி­தம் ஆகக்­கு­றை­வாக 0.52 என பதி­வாகி இருந்­தது. ஆனால் அதற்­குப் பிறகு இது படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து வரு­கிறது. வாராந்­தி­ரத் தொற்­றுப் பர­வல் விகி­தத்­தைக் கணக்­கி­டும் வழக்­கத்தை சுகா­தார அமைச்சு 2021 அக்­டோ­ப­ரில் தொடங்­கி­யது.

ஆகஸ்ட் மாத நில­வ­ரம் அப்­போது கணக்­கி­டப்­பட்­டது.

ஆகஸ்ட் 30ஆம் தேதி வாராந்­தித் தொற்று விகி­தம் ஆக அதி­ க­மாக 3.01 என்று பதி­வா­னது. டெல்டா கிருமி வகை அதி­க­மா­கப் பர­வி­யி­ருந்த நேரம் அது.

செப்­டம்­பர் மாதம் இந்த விகி­தம் 2 ஆக இருந்தது. அது அந்த மாதத்­தின் இறு­தி­யி­லி­ருந்து குறை­யத் தொடங்­கி­யது. அக்­டோ­பர் 16ஆம் தேதி 1க்குக் கீழ் இறங்­கி­னா­லும் மீண்­டும் படிப்­ப­டி­யாக அது உய­ரத் தொடங்­கி­யது.

இந்த விகி­தம் 1க்குக் கீழ் குறை­யும்­போது கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களில் குறிப்­பிட்ட அளவு தளர்வு அறி­விக்­கப்­ப­ட­லாம் என்று அக்­டோ­பர் 23ஆம் தேதி நடைெபற்ற கொவிட்-19க்கான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அக்­கு­ழு­வின் இணைத் தலை

­வ­ரான லாரன்ஸ் வோங் கூறி இருந்­தார்.

அந்த நாளில் 1.14 ஆக வாராந்­திர தொற்­றுப் பர­வல் விகி­தம் இருந்­தது. நவம்­பர் 3ஆம் தேதி 0.96க்கு இறங்­கிய அது, நவம்­பர் 12ஆம் தேதி 1.04க்கு அதி­க­ரித்­தது. அதன் பின்­னர் ஒவ்­வொரு நாளும் 1க்குக் கீழ் பதி­வாகி வந்த நிலை­யில் தற்­போது அது மீண்­டும் அதி­க­ரித்துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!