வீடு வாங்குவோருக்குக் கைகொடுக்க ஏற்பாடு

வீடு வாங்­கு­வோ­ரின் அக்­க­றை­க­ளைப் பாது­காக்க வரை­யப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­க­ளின் தொடர்­பில் நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் பொது­மக்­க­ளின் கருத்­து­களை சேக­ரிக்­க­வுள்­ளது. சொத்து மேம்­பாட்­டா­ளர்­களை, கட்­டி­மு­டிக்­கப்­ப­டாத தனி­யார் வீடு­க­ளின் தொடர்­பில் கூடு­தல் துல்­லி­ய­மான கூடு­தல் தக­வல்­களை வீட்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கச் செய்­வது இந்­தப் பரிந்­து­ரை­களில் ஒன்று. வர்த்­த­கத்­தில் சொத்து மேம்­பாட்­டா­ளர்­க­ளின் நடத்ைத, வீட­மைப்­புத் திட்­டத்­தின் வடி­வ­மைப்பு சார்ந்த தக­வல்­கள், நில உரி­மை­யா­ளர்­க­ளின் அடை­யா­ளம் போன்­றவை இந்­தத் தக­வல்­களில் அடங்­கும்.

சொத்து மேம்­பாட்­டா­ளர்­க­ளுக்­கான விதி­மு­றை­களில் சில மாற்­றங்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக, வாக­னத்­தி­லி­ருந்து இறக்­கி­வி­டும் இடங்­கள், தண்­ணீர் வச­தி­கள் போன்ற அம்­சங்­களை வீடு­க­ளுக்­கான விளம்­ப­ரங்­களில் சேர்ப்­ப­தற்கு முன்பு சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அனு­மதி வாங்­கி­யி­ருக்­க­வேண்­டும் என்பது பரிந்துரைகளில் ஒன்று.

மேலும், வீட்­டுப் பரி­வர்த்­தனை ஒப்­பந்­தத்­தில் இடம்­பெ­றும் அம்­சங்­க­ளி­லும் மாற்­றங்­க­ளைச் செய்ய நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்­ளது. பரி­வர்த்­தனை செல்­லு­ப­டி­யா­கா­மல் போனால் வீட்டை வாங்­கு­வ­தற்­குச் செல­வான தொகை­யைத் திரும்பப் பெறு­வ­தன் தொடர்­பில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கூடு­தல் பாது­காப்பு வழங்­கு­வது பரிந்­து­ரைக்­கப்­பட்ட மாற்­றங்­களில் அடங்­கும்.

பரிந்­து­ரைக்­கப்­பட்ட இத்­த­கைய மாற்­றங்­க­ளால் தக­வல்­கள் மேலும் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வ­தோடு வாடிக்­கை­யா­ளர்­க­ளின் அக்­க­றை­களுக்­குக் கூடு­தல் பாது­காப்பு கிடைக்கும். எனி­னும் இவற்­றால் சொத்து மேம்­பாட்­டா­ளர்­க­ளுக்­குப் பெரிய அள­வில் சுமை ஏற்­படும் என்ற கருத்­தும் நில­வு­கிறது.

சொத்து மேம்­பாட்­டா­ளர்­க­ளுக்­கான விதி­மு­றை­க­ளுக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள மாற்­றங்­க­ளின் தொடர்­பில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து நேற்று முதல் கருத்­து­கள் சேக­ரிக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன. அடுத்த மாதம் ஐந்­தாம் தேதி­வரை பொது­மக்­கள் இணை­யம்­வழி கருத்­து­களை முன்­வைக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!