பாலியல் குற்றம்: காணொளி மூலம் இளைஞர் ஒப்புதல்

வயது குறைந்த பெண் ஒரு­வ­ரைப் பாலி­யல் ரீதி­யா­கத் தாக்­கி­ய­தைக் காணொளி மூலம் ஒப்­புக்­கொண்ட இளையர் ஒருவர் $50,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 21ஆம் தேதி­யன்று மாலை 5 மணிக்­கும் இரவு 9 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் சிராங்­கூன் சாலைக்கு அரு­கில் உள்ள டவு­னர் சாலை­யில் 14 வயது சிறு­மி­யின் சம்­ம­த­மின்றி அவ­ரு­டன் அந்த 18 வயது சிங்­கப்­பூர் இளை­யர் பாலி­யல் உறவு கொண்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­த­போது இரு­வ­ரும் நண்­பர்­க­ளாக இருந்­த­தாக மாவட்ட நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட இளை­ய­ரின் மருத்­து­வப் பரி­சோ­தனை முடி­வு­கள் இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

அந்த இளை­ஞர் காணொளி மூலம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

பாதிக்­கப்­பட்ட சிறு­மி­யின் அடை­யா­ளத்­தைக் காக்க இளை­ஞ­ரின் பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த வழக்கு வரும் மார்ச் மாதத்­துக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­ட­வி­ரோத ஒன்­று­கூ­ட­லில் ஈடு­பட்­ட­தா­க­வும் அந்த இளை­ஞர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அந்த சட்­ட­வி­ரோத ஒன்­று­கூ­ட­லின்­போது ஒரு­வர் தடி ஒன்று வைத்­தி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அது ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய ஆயு­த­மாக நீதி­மன்ற

ஆவ­ணங்­களில் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்த இளை­ஞர் வேறு பெண்­

க­ளைப் பாலி­யல் ரீதி­யா­கத் தாக்­கி­யுள்­ளாரா என்­பதை கண்­டு­

பி­டிக்க காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

பாலி­யல் ரீதி­யா­கத் தாக்­கப்­பட்­டுள்ள பெண்­கள் உட­ன­டி­யாக அது­கு­றித்து காவல்­து­றை­

யி­ன­ரி­டம் தெரி­விக்க வேண்­டும் என்று காவல்­துறை கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

ஒருவரின் சம்மதமில்லாமல் வலுக்கட்டாயமாக அவருடன் பாலியல் உறவுகொள்ளும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!