வாடகை கார் எரிந்தது; ஓட்டுநர் மரணம்

வாடகை கார் ஒன்று தீப்­பற்றி எரிந்­த­தில் அதன் ஓட்­டு­நர் காருக்­குள் மாட்­டி­ய­நி­லை­யில் மாண்­டார். புளோக் 42 கேஷியா கிரெ­சென்ட் திறந்­த­வெளி கார்­நி­றுத்­தத்­தில் நேற்று பிற்­ப­கல் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் கார்நிறுத்தத்தில் புகை எழும்பியதைக் கண்டு தாமும் தமது கண­வ­ரும் புளோக்­கி­லி­ருந்து கீழிறங்கிச் சென்று பார்த்­த­போது வெள்ளைநிற மஸ்டா 3 கார் இன்­னொரு காரு­டன் மோதி­ய­ நிலையில் நின்றதைக் கண்­ட­தாக திரு­வாட்டி டெர், 47, என்­னும் குடி­யி­ருப்­பா­ளர் கூறி­னார். காரின் முன்­ப­குதி நொறுங்கி காரி­னுள் புகை மண்­டி­யி­ருந்­த­தா­கக் கூறிய அவர், அப்­போது வரை தீப்­பி­டிக்­க­வில்லை என்­றார்.

காரின் அருகே சென்று உள்ளே யாரும் இருக்­கி­றார்­களா என்று அறிய காரின் கத­வைத் தட்­டி­ய­போது உள்­ளி­ருந்து யாரோ அசை­வது தென்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

உட­ன­டி­யாக அக்­கம்­பக்­கத்­தாரை உத­விக்கு அழைக்க தாம் ஓடி­ய­தாக அவர் சொன்­னார்.

வில்­கின்­சன் டான், 47, என்­னும் மற்­றொரு குடி­யி­ருப்­பா­ளர், பெரிய வெடிப்­புச் சத்­தம் கேட்­ட­தா­க­வும் அத­னைத் தொடர்ந்து கார் மள­ம­ள­வென தீப்­பி­டித்து எரிந்­த­தா­க­வும் கூறி­னார்.

தீய­ணைப்­பா­ளர்­கள் வரும் வரை 15 முதல் 20 நிமி­டங்­கள் வரை தீ எரிந்­தது. பிற்­ப­கல் 3.40 மணி­ய­ள­வில் தீ அணைக்­கப்­பட்டது. இதற்கிடையே, முப்பதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் வாடகைக்கு காரை எடுத்துச் சென்றதாக வாடகை கார் நிறுவனம் கூறியது.

கேலாங் அக்கம்பக்க காவல்நிலையத்திற்குப் பின்னால் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. (படத்தில்) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருடன் காவல்துறை அதிகாரிகள் சிலரும் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர். ஓட்டுநரை வெளியில் இழுக்க ஓர் அதிகாரி முயன்றும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று வில்கின்சன் டான் கூறினார்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!