தொலைதூர விமானப் பயணத்தின்போது பயணிகள் நன்கு தூங்க வழி

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கெண்ட் ரிட்ஜ் வளாகத்தில் எஸ்ஐஏ-என்யுஎஸ் மின்னிலக்க விமானப் போக்குவரத்து நிறுவன ஆய்வுக்கூடம் என்ற புதிய ஒரு சோதனைச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் (எஸ்ஐஏ) இந்தப் பல்கலைக்கழகமும் சேர்ந்து $45 மில்லியன் செலவில் அமைத்துள்ள அந்த ஆய்வகம் திங்கட்கிழமை (ஜனவரி 10) தொடங்கப்பட்டது. துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அதைத் தொடங்கிவைத்தார்.

விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது பயணிகள் அதிக தூக்கத்தை, வசதியை அனுபவிக்க ஏதுவாக பல புத்தாக்க ஏற்பாடுகளை உருவாக்கும் வழிகள் பற்றி அங்கு ஆராயப்பட்டு வருகிறது.

விமானத்தில் பிசினஸ், மலிவுக் கட்டண பயணிகள் அமர்ந்து செல்லும் கூடத்தைப்போல் பாவனையாக அங்கு ஒரு பகுதி அமைக்கப்பட்டு உள்ளது.

விமானம் பறந்து செல்லும்போது பயணிகள் எந்த நேரத்தில் எப்படி தூங்குகிறார்கள் என்பது பற்றிய ஆய்வுகள் அங்கு துல்லியமாக மேற்கொள்ளப்படும்.

விமானத்தில் பயணிகளைச் சாப்பாட்டுக்கு எந்த நேரத்தில் எழுப்புவது சரியாக இருக்கும் என்பதை இந்த இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த ஆய்வாளர்கள், ஒன்றாகச் சேர்ந்து ஆய்வுக்கூடத்தில் ஆராய்வார்கள்.

ஒவ்வொரு பயணியின் ஓய்வு நேரத்தைக் கணக்கில் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஏற்பாடுகளைக் கண்டுபிடித்து செயல்படும் முறையைக் காணவும் அவர்கள் முயல்வார்கள்.

ஆய்வுக்கூடத்தில் 70க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும் முனைவர் படிப்பு மாணவர்களும் ஆய்வுகளில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!