ஆசியான் ஆணைய பிரதிநிதியாக சஷி ஜயகுமார் மறுநியமனம்

எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் சஷி ஜயகுமார் ஆசியான் மனித உரிமை ஆணையத்திற்கான சிங்கப்பூர் பிரதிநிதியாக மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அந்த நியமனம், 2022 ஜனவரி 1 முதல் மூன்றாண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்று வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.

ஆசியான் அனைத்து அரசாங்க மனித உரிமை ஆணையம் என்று குறிப்பிடப்படும் அந்த அமைப்பு 2009ல் தோற்றுவிக்கப்பட்டது.

நோம் பென் நகரில் 2012 நவம்பரில் நடந்த உச்சநிலை மாநாட்டில் ஆசியான் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட ஆசியான் மனித உரிமை பிரகடனத்தை மேம்படுத்துவதற்கான பொறுப்பை அந்த ஆணையம் மேற்கொண்டுள்ளது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் இயூஜின் டான், இரண்டாவது முறையாக அந்த ஆணையத்திற்கான சிங்கப்பூரின் மாற்று பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், டாக்டர் ஜயகுமார் விடுப்பில் இருக்கும்போது சிங்கப்பூரை அந்த ஆணையத்தில் பிரதிநிதிப்பார். இணைப் பேராசிரியர் டான் 2012 முதல் 2014 வரை நியமன நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றியவர்.

டாக்டர் ஜயகுமார் இப்போது உன்னத தேசிய பாதுகாப்பு நிலையத்திற்குத் தலைமை தாங்குகிறார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளியில் எதிர்கால பிரச்சினைகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிர்வாக ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்படுகிறார்.

டாக்டர் ஜயகுமார் 2002 முதல் 2017 வரை சிங்கப்பூர் நிர்வாகச் சேவையின் உறுப்பினராக தொண்டாற்றி இருக்கிறார். லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியில் 2001 முதல் 2014 வரை மூத்த வருகை ஆய்வாளராகவும் அவர் இருந்து வந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!