சிங்கப்பூருக்கான பயண ஆலோசனையில் மாற்றம் செய்த அமெரிக்கா

அமெரிக்காவின் ‘சிடிசி’ எனப்படும் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் சிங்கப்பூரை கொவிட்-19 கிருமித்தொற்று அதிகம் ஏற்படக்கூடிய நாடாக வகைப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு, சிங்கப்பூரில் கிருமிப் பரவல் நிலவரம் குறித்து ‘தகவல் இல்லை’ என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.

கிருமித்தொற்று ஏற்படும் அபாயத்தைக் கருத்தில்கொண்டு அமெரிக்கா பிற நாடுகளை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி வருகிறது.

முதல் நிலையில் இடம்பெறும் நாடுகளில் கிருமித்தொற்று அபாயம் குறைவு, நான்காம் நிலையில் உள்ளவுற்றில் இந்த அபாயம் ஆக அதிகம்.

சிங்கப்பூர் மூன்றாம் நிலை நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் நிலையில் உள்ள நாடுகளில் கிருமித்தொற்று அபாயம் அதிகம் என்பது அமெரிக்கா தந்துள்ள பொருள்.

மூன்றாம் நிலையில் உள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் இந்த நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கிருமித்தொற்று குறித்த தகவல் இல்லாத நாடுகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறு மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தவிர்க்கமுடியாத காரணங்களால் இத்தகைய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும்போது மக்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!