லியோங்கின் ஆதாரம் இல்லா குற்றச்சாட்டுக்குப் பிறகு இந்திராணி எம்.பிக்களுக்கு விடுத்த நினைவூட்டல்

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய், பள்­ளி­களில் வேறு­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்­பான நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் குறித்த தனது முந்­தைய குற்­றச்­சாட்­டு­களை நிரூ­பிக்­கத் தவ­றி­யதை அடுத்து, நாடா­ளு­மன்ற அவைத் தலை­வர் இந்­தி­ராணி ராஜா, எல்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் கடு­மை­யான நினை­வூட்­டலை நேற்று விடுத்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் பொறுப்­பு­டன் பேசும் சிறப்­பு­ரி­மை­யைப் பயன்­படுத்த வேண்­டும் என்­பதை உறுப்­பி­னர்­க­ளுக்கும் நினை­வூட்­டிய அவர், நேற்று முன்­தி­னம் திரு லியோங், பள்­ளி­களில் வேறு­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்­பான நிர்­வாக நட­வ­டிக்­கை­களை ஆசி­ரி­யர்­கள் மேற்­கொள்­வ­தா­கக் கூறி­னார் என்று குறிப்­பிட்­டார்.

"இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஒட்­டு­மொத்த ஆசி­ரி­யர்­களை­யும் கேவ­லப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது," என்று குமாரி இந்­தி­ராணி கூறி­னார்.

நேற்று முன்­தின அமர்­வின் போது, சில ஆசி­ரி­யர்­கள் ஏற்­கெனவே பள்­ளி­களில் வேறு­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்­பான நிர்­வாக நட­வ­டிக்­கை­களை (விடி­எஸ்) மேற்­கொண்­டுள்­ள­னர் என்று குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து தக­வல் பெற்­ற­தாக திரு லியோங் கூறி­னார்.

பள்­ளி­கள் பற்­றிய விவ­ரங்­கள் மற்­றும் கூறப்­படும் நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட கூடு­தல் தக­வல்­களை கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், திரு லியோங்­கி­டம் கேட்­டார்.

திரு லியோங் தனது வாட்ஸ்­அப் தளத்­தி­லி­ருந்து அந்­தத் தக­வலை பெற்று பதி­ல­ளிக்­கி­றேன் என்­றும் குறிப்­பிட்­டார்.

"கவலை கொள்­ளும் பல பெற்­றோர்­கள் இன்­னும் உங்­க­ளி­ட­மி­ருந்­தும் உங்­கள் அமைச்­சி­ட­மி­ருந்­தும் திட­மான உத்திரவாதம் கிடைக்க இன்­னும் முயன்று வரு­கி­றார்­கள்," என்று திரு லியோங், அமைச்­சர் சானி­டம் தெரி­வித்­தார்.

6,000 பேர் உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கும் ஒரு சமூக ஊட­கத் தளத்­தி­லி­ருந்து மேற்­கண்ட தக­வ­லைத் தாம் பெற்­ற­தாக திரு லியோங் கூறி­ய­போது, அவைத் தலை­வர் குமாரி இந்­தி­ராணி, "உறுப்­பி­னர் எந்­த­வொரு குற்­றச்­சாட்டையும் முன்­வைக்­கும்­போது அது குறித்த சரி­யான ஆதா­ரங்­களை முன்­வைக்க வேண்­டும்," என்று வலியுறுத்தினார்.

"திரு லியோங் இங்கு வந்து பரவலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதன் தொடர்பான ஆதாரங்களைக் கேட்கும்போது அவற்றை முன்வைக்க முடியாத நிலைமையை இன்று நம்மால் காண முடிகிறது," என்றார் அமைச்சர் இந்திராணி.

குமாரி இந்திராணி கூறியது உங்களுக்குப் புரிந்ததா என்று மன்ற நாயகர் திரு டான் சுவான் ஜின், திரு லியோங்கிடம் கேட்டார். அப்போது அவர் அது குறித்து கேள்வி ஒன்று இருக்கிறது என்று சொன்னபோது, அதற்கு இப்போது நேரமில்லை என்று கூறிவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!