சிறாரின் நுண் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் திட்டம்

பாலர் கல்­வியை வழங்­கும் மக்­கள் செயல் கட்சி சமூக அற­நி­று­வ­னத்­தின் அனைத்து 320 ஸ்பார்க்­கல்­டோட்ஸ் நிலை­யங்­களும் அடுத்த மூன்று ஆண்­டு­களில் படிப்­ப­டி­யாக புதிய கல்­வித் திட்­டம் ஒன்றை நடை­மு­றைப்­ப­டுத்த உள்ளன.

அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் புதிய அணு­கு­முறை பாலர் பள்ளி மாண­வர்­க­ளின் நுண் சிந்­த­னைத் திறனை மேம்­ப­டுத்த உத­வும். அன்­றா­டப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண சிறா­ருக்கு இந்­தக் கற்­றல் முறை உத­வி­யாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

'ஸ்டெமி' எனப்­படும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம், கண்­டு­பி­டிப்பு, தொழில்­

மு­னைப்பு பாடங்­கள் 2018ஆம் ஆண்­டில் 12 பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ் பாலர் பள்­ளி­களில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. தற்­போது 61 பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ் பாலர் பள்­ளி­களில் இந்­தக் கற்­பித்­தல் உத்தி கையா­ளப்­ப­டு­கிறது.

இந்­தப் பாடங்­க­ளின்­போது தீர்வு ­கள் தேவைப்­படும் விவ­கா­ரங்­கள் பற்றி மாண­வர்­க­ளி­டம் கேள்­வி­கள் எழுப்பி கலந்­து­ரை­யா­டல்­களை தொடங்­கி­வைத்து ஆசி­ரி­யர்­கள் வழி­ந­டத்­து­வர்.

அத­னைத் தொடர்ந்து, ஆசி­ரி­யர்­கள் முன்­வைத்த விவ­கா­ரங்­கள் பற்றி அறிந்து தீர்வு காண புத்­த­கங்­கள், இணை­யம் முத­லி­யவை மூலம் மாணவர்கள் ஆய்வு செய்­வர். அல்­லது நண்­பர்­கள், குடும்­பத்­தி­ன­ரு­டன் அது­கு­றித்து

கலந்­து­ரை­யா­டு­வர்.

320 பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ் பாலர் பள்­ளி­களில் இந்­தக் கற்­றல் அணு­கு­மு­றையை அறி­

மு­கப்­ப­டுத்­துவது குறித்து தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று மெய்­நி­கர் நிகழ்­வு ஒன்றில் அறி­வித்­தார்.

அந்த மெய்­நி­கர் நிகழ்­வில் ஏற்­கெ­னவே 'ஸ்டெமி' கற்­றல் முறை­யைக் கையாண்டு வரும் நிலை­யங்­க­ளைச் சேரந்த மாண­வர்­க­ளின் கண்­டு­பி­டிப்­பு­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டன. நிகழ்ச்சியில் மாண­வர்­கள் தங்­கள் கண்­டு­பி­டிப்­பு­கள் பற்றி பேசி­னர். அவர்­களில் 6 வயது தேவிந்­திர சிங்­கும் ஒரு­வர். இவர் செங்­காங் நார்த் புளோக் 292பியில் அமைந்­துள்ள பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ் பாலர் பள்­ளி­யில் பயில்­ப­வர்.

வீட்­டில் யாரும் இல்­லா­த­போது பொட்­ட­லங்­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டால் அதைப் பாது­காப்­பாகப் பூட்டி வைக்க ஏது­வான சிறப்­புப் பெட்டி ஒன்றை தேவிந்­திர சிங் உருவாக்கியுள்ளார்.

தங்­கள் கடு­மை­யான உழைப்­பா­லும் புத்­தாக்­கச் சிந்­தனை­யா­லும் உரு­வான கண்­டு­பி­டிப்­பு­களை மற்­ற­வர்­க­ளி­டம் காட்ட ஃபியூச்­சர்-ரெடி மெய்­நி­கர் நிகழ்வு நல்­ல­தொரு வாய்ப்பு அளித்­த­தாக பிசி­எஃப் நிபு­ணத்­துவ, கல்வி மேம்­பாட்­டுப் பிரி­வின் துணை இயக்­கு­நர் திரு­வாட்டி ஏஞ்­சலா யாங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!