மசகோஸ்: நபிகள் நாயகம் தொடர்பான கேலிச் சித்திரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை

நபி­கள் நாய­கத்­தின் கேலிச்­சித்­தி­ரங்­க­ளை­யும் அவரை அவ­ம­திக்­கும் படங்­களையும் வெளி­யி­டு­வது சிங்கப்­பூ­ரில் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது என்­ப­தால் அர­சி­யல் கேலிச் சித்­தி­ரங்­கள் புத்­த­கம் இங்கு தடை செய்­யப்­பட்­டுள்­ளது என்று முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்­துள்­ளார்.

'ரெட் லைன்ஸ்: அர­சி­யல் கேலிச்­சித்­த­ரங்­களும் தணிக்­கைக்கு எதி­ரான போராட்­டமும்' என்ற புத்­த­கத்­தில் உள்ள இத்­த­கைய படங்­கள், பேச்­சு­ரிமை, கல்­வித்­துறை, அல்­லது வேறு வகை­யில் வெளி­யி­டப்­பட்­டா­லும் முஸ்­லிம்­களை புண்­ப­டுத்­தும் வகை­யில் இருக்­கும் என்று நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் திரு மச­கோஸ் வலி­யு­றுத்­தி­னார்.

"நபி­கள் நாய­கம் மற்­றும் இஸ்­லாம் பற்­றிய கேலிச்­சித்­தி­ரங்­க­ளைத் தவிர, மற்ற சம­யங்­களை அவ­மதிக்­கும் படங்­களும் புத்­த­கத்­தில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. அந்தப் புத்தக எழுத்தாளர்களை அவமதிப்பதோ, இழிவுபடுத்துவதோ நோக்கமில்லை என்றும் கல்வி போதிப்பதே தங்கள் நோக்கம் என்று நூலாசிரியர்கள் கூறலாம் என்றும் இந்நூலை அரசாங்கம் நிராகரிக்கிறது," என்­றும் அமைச்­சர் சொன்­னார்.

கடந்த ஆண்டு ஆகஸ்­டில் வெளி­யி­டப்­பட்ட இப்­புத்­த­கம், சம­யங்­களை இழி­வு­ப­டுத்­தும் உள்­ள­டக்­கத்­தைக் கொண்­டி­ருப்­ப­தற்­காக விரும்­பத்­த­காத வெளி­யீ­டு­கள் சட்­டத்­தின் கீழ் ஆட்­சே­ப­ணைக்­கு­ரி­ய­தாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தால், இங்கு விற்­கவோ அல்­லது விநி­யோ­கிக்­கவோ அனு­ம­திக்­கப்­பட மாட்­டாது என்று தக­வல்­தொ­டர்பு, ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் கடந்த நவம்­ப­ரில் தெரி­வித்­தது.

நபிகளை இழிவுபடுத்தும் மற்றும் அவமதிக்கும் படங்கள் உலகின் பல பகுதிகளில் கலவரத்துக்கும் மரணங்களுக்கும் வழிவகுத்தன என்று குறிப்பிட்ட திரு மசாகோஸ், மேலும் முக்கிய பதிப்பகங்கள் இந்த புண்படுத்தும் படங்களை வெளியிடு வதைத் தவிர்த்தன என்றார்.

சிங்­கப்­பூ­ரின் ஒற்றுமையான இனம், சமய உற­வு­க­ளுக்கு அர­சாங்­கம் மற்­றும் சமூ­கத்­தின் கவனமான நிலைப்பாடு தேவை. ஒவ்­வொரு சமய நம்­பிக்­கை­யும் மரி­யா­தை­யு­டன் நடத்­தப்­ப­டு­வது இன்­றி­ய­மை­யா­தது என்று அவர் மேலும் கூறி­னார்.

"ஒருவர் மற்றவர் மீது காட்டும் மரியாதை, அக்கறை மூலம் நாம் அனு­ப­விக்­கும் அமைதி, நல்­லி­ணக்­கத்தைப் பாழ்ப்படுத்தும் எதை­யும் நாங்­கள் அனுமதிக்க முடியாது," என்று அமைச்சர் மச­கோஸ் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!