பொங்கல் கொண்டுவந்த புது நம்பிக்கையும் புத்துணர்ச்சியும்

புதிய நம்­பிக்கை, புத்­து­ணர்ச்­சி­யோடு இன்று பொங்­கல் பொங்­கு­கி­றார் முகுந்­தன் முக்தி. தமி­ழர்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து கொண்­டா­டும் பண்­பாட்­டுத் திரு­நா­ளான பொங்­கல் முகுந்­த­னுக்கு எப்­போ­தும் மன­துக்கு நெருக்­க­மான நாள்.

ஈராண்­டு­க­ளாக நீடித்த மனக் கவ­லை­கள் நீங்­கி­ய­தால் பொங்­கல் இந்த ஆண்டு மேலும் அதி­க­ளவு மகிழ்ச்­சியை அவ­ருக்­குக் கொண்டு வந்­துள்­ளது.

வர்த்­த­கத் துறை­யில் பணி­யாற்­றிய திரு முகுந்­தன் முக்தி, கடந்த ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­யால் வேலையை இழந்­தார்.

எனி­னும் அதற்கு முன்­ன­தா­கவே திறன்­மேம்­பாடு செய்து தக­வல் தொழில்­நுட்­பத்­தில் பணி­யாற்ற தம்­மைத் தயார்­ப­டுத்­திக்­கொண்­ட­தால் விரை­வில் புதிய வேலைக்கு அவ­ரால் மாற முடிந்­தது.

எனி­னும் வாழ்க்­கைத் தொழில் மாற்­றத்­தால் முத­லில் நிதி நிலைமை சற்று ஆட்­டங்­கண்­டது.

“புதிய துறை­யில் சேர்ந்­தபோது மாத வருமானம் குறைந்­தது. அதனால் மனக் கவலை ஏற்பட்டது. சம்­ப­ளம் இப்­போது உயர்ந்­துள்­ளது,” என்றார் முகுந்தன்.

மன உளைச்­ச­லால் உடல் நல­மும் பாதிப்­ப­டைந்­த­தா­கக் கூறினார் தக­வல் தொழில்­நுட்ப நிர்­வா­கி­யான 38 வயது முகுந்­தன். ஆனால் துவண்டுவிடாமல் இருக்க சைக்­கிள் ஓட்டத்தில் ஈடுபட்டார்.

“19 கிலோ எடை­யைக் குறைத்­துள்­ளேன்,” என்றார் மகிழ்ச்சியோடு.

“இந்த தை மாதம் எல்­லா­ருக்­கும் எல்­லா­வித நன்­மை­யை­யும் கொண்டு வரும்,” என்று நம்­பிக்­கை­யோடு கூறினார் திரு முகுந்­தன்.

இன்று வீட்­டில் பொங்­கல் வைத்த பின்­னர் மக­ளோடு லிட்­டில் இந்­தியா பொங்­கல் கொண்­டாட்­டத்­தில் பங்­கேற்­கப் போவ­தா­கக் கூறினார்.

அங்கு மாட்டுக்குப் புல் கொடுக்கப் போவதாக சொன்னார் அதினா.

“வேலைக்­கும் பள்­ளிக்­கும் செல்­ல­வேண்­டிய சூழல் ஏற்­பட்­டா­லும் குடும்பத்தோடு பொங்­க­ல் விழாவைத் தவ­றா­மல் கொண்­டா­டு­வ­தில் கடப்­பாடு கொண்­டுள்­ளோம்,” என்­றார் திரு முகுந்தன்.

தற்­போ­தைய கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லால் கடைக்­குச் சென்று பொருட்­களை வாங்­கும் வித­மும் மாறி­யி­ருப்­ப­தாக திரு முகுந்­த­னின் மனை­வி­யான 38 வயது திரு­மதி ரேவதி மோகன் தெரி­வித்­தார்.

“அதிக நேரம் வெளியே இருப்­பது அவ்­வ­ளவு பாது­காப்­பாக இல்லை. நேரத்­தி­லும் பொருள் வாங்­கு­வ­தி­லும் சிக்­க­னம் காட்ட வேண்­டி­யுள்­ளது,” என்­றார் திரு­மதி ரேவதி.

தமது 64 வயது மாமி­யார் திரு­மதி தேன்­மொழி நாகப்­ப­னு­டன் சேர்ந்து பொங்­க­லுக்கு அறு­சுவை உணவு சமைத்து விருந்­துண்­பது வழக்­கம் என்­றார் அவர்.

“அம்மா செய்­யும் வடை எனக்­குப் பிடிக்­கும்,” என்­று சொன்னார் முகுந்­தன் - ரேவதி தம்­ப­தி­யின் ஆறு வயது மகள் அதினா இலக்­கியா.

பொங்­க­லுக்கு திரு­மதி ரேவதி வீட்டு வாச­லில் வண்­ணக் கோலம் போடு­வார்.

“இந்த ஆண்டு கோலம் போடு­வ­தற்கு என் மகள் உதவி செய்­வாள்,” என்­றார் மகிழ்ச்­சி­யோடு.

“கிரு­மிப்­ப­ர­வ­லின் தாக்­கத்தை மற்ற பல குடும்­பங்­கள் தொடர்ந்து உணர்­கின்­றன. அவை மீண்­டு­வந்து அடுத்த பொங்­க­லை­யும் மகிழ்ச்­சி­யு­டன் கொண்­டாட வேண்­டும் என்­பதே என் வேண்­டு­தல்,” என்­றார் திரு முகுந்­த­ன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!