$240,000 மானியத்தை பெற்றுத்தர சதி

தற்­போது ‘ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர்’ என்று அழைக்­கப்­படும் முன்­னைய ஊழி­ய­ரணி மேம்­பாட்டு அமைப்பை ஏமாற்றி 240,000 வெள்ளி மதிப்­புள்ள மானி­யத்தை பல நிறு­வ­னங்­க­ளுக்கு பெற்றுத்தர இரு­வர் கூட்­டாக சேர்ந்து சதி செய்­து உள்­ள­னர்.

டி’பியூட்­டி­இ­மேஜ், பிங்க் வால­ரிஸ், கலர் ஃபேஸ் அகா­டமி ஆகிய நிறு­வ­னங்­களும் அவற்­றில் அடங்­கும். அமைப்பை ஏமாற்றி கூடு­த­லாக 350,000 வெள்ளி வழங்­க­வும் அவர்­கள் கூட்­டுச் சதி­யில் ஈடு­பட்ட தாகக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால் நிறு­வ­னங்­க­ளுக்கு மானி­யங்­கள் வழங்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. மானி­யம் வழங்கப்­ப­டா­த­தற்­கான கார­ணம் தெரி­ய­வில்லை.

நேற்று நீதி­மன்­றத்­தில் ஸூ ஃபெங் ஜியா,37, ஓ போ கியோக், 56, ஆகிய இரு­வர் மீது தலா 52 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

2014க்கும் 2015க்கும் இடையே அவர்­கள் குற்­றச்­செ­யல்­களைப் புரிந்ததாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஒவ்­வொரு ஏமாற்­றுக் குற்­றச் சாட்­டும் 2,500 முதல் 42,000 வெள்ளி வரை­யி­லான தொகையை உள்­ள­டக்­கி­யது. பல பொய்­யான கணக்­கு­களை அவர்­கள் வைத்து இருந்­த­தா­க­வும் குற்­றச்­சாட்­டு­கள் தெரி­விக்­கின்­றன.

நிறு­வ­னங்­களைப் பதிவு செய்­யும் அர­சாங்க அமைப்­பான கணக்­கி­யல், நிறு­வ­னக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்தில் (ACRA) தகவல் களை ஆராய்ந்தபோது அவர்­கள் பல நிறு­வ­னங்­களில் பல்­வேறு பொறுப்­பு­களில் இருந்­தது தெரிய வரு­கிறது.

‘கலர் ஃபேஸ் இண்­டர்­நே­ஷ­னல்’ எனும் ஒப்­ப­னைக் கலை நிர்­வா­கப் பள்­ளி­யில் போ கியோக் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யா­க­வும் ஸூ இயக்­கு­ந­ராகவும் இருந்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளான இரு­வ­ரும் ஒரே வீட்­டின் முக­வ­ரி­யைப் பயன் படுத்­தி­யி­ருந்­த­னர். இரு­வர் மீதான வழக்கு விசா­ரணை அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு ஏமாற்­றுக் குற்­றத்­திற்­கும் பத்து ஆண்­டு­கள் வரை சிைறத் தண்­ட­னை­யும் அபராத­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!